»   »  ஆயிரத்தில் இருவர்... இது ‘களவுக் கதை’ இல்லை... சரணின் ‘கனவுக் கதையாம்’!

ஆயிரத்தில் இருவர்... இது ‘களவுக் கதை’ இல்லை... சரணின் ‘கனவுக் கதையாம்’!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சரணின் இயக்கத்தில் வினய் நாயகனாக இரட்டை வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘ஆயிரத்தில் இருவர்.

காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, அசல் என முன்னணி நாயகர்களை வைத்து படம் இயக்கியவர் இயக்குநர் சரண். இவர் தற்போது வினய் நாயகனாகவும், ஸ்வஸ்திகா, சாமுத்ரிகா, கேஷா என மூன்று அழகு தேவதைகள் நாயகிகளாகவும் நடிக்கும் ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்திற்கான கதைக்கரு சரணுக்கு கனவில் கிடைத்ததாம். ஒருநாள் அதிகாலை 3 மணி அளவில் தனக்கு வந்த கனவிற்கு உருவம் கொடுத்து படமாக்கியுள்ளாராம்.

வயிற்றுக்குள்ளேயே மோதல்...

வயிற்றுக்குள்ளேயே மோதல்...

அம்மா வயிற்றுக்குள் இருக்கும் இரட்டையர்கள் ஒருவருக்கொருவர் ஏசியபடி மோதிக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதை கம்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் இப்படத்தில் காட்டி இருக்கிறார்களாம்.

இரட்டையர்கள்...

இரட்டையர்கள்...

இந்த சண்டை போடும் இரட்டையர்களாக, இப்படத்தின் மூலம் முதன்முறையாக இரட்டை வேடத்தில் வினய் நடித்துள்ளார்.

ஐ படம் மாதிரி...

ஐ படம் மாதிரி...

ஷங்கருக்கு ஐ படம் எப்படியோ அப்படித்தான் தனக்கும் இந்த ‘ஆயிரத்தில் இருவர்' என இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் சரண்.

வாயை மட்டும் நம்பி...

வாயை மட்டும் நம்பி...

மேலும், டி.ராஜேந்தர் வசனம் எழுதியதே இல்லை. வாயை எடுத்துக் கொண்டு மட்டுமே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போவார். வசனங்கள், காட்சி படமாகும் போது தான் வாயால் சொல்லப் படும். டேக்குக்கு டேக் வசனம் மாறிக் கொண்டே இருக்கும்.

டி.ஆர். மாதிரி திறமைசாலி இல்லை...

டி.ஆர். மாதிரி திறமைசாலி இல்லை...

நான், டி.ஆர். போல திறமைசாலி இல்லை. இருப்பினும் பேனா வாயை ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் பெரும்பாலும் திறப்பேன். ஆனால், எழுதி முடிப்பதற்காக படப்பிடிப்பு காத்திருக்காது.

காலி மண்டை...

காலி மண்டை...

அது பாட்டுக்கு டாணென்று நொடி பிசகாமல் நடக்கும். எனவே காலி மண்டையுடன் தான் படப்பிடிக்கு கிளம்புவேன்' என இவ்வாறு அப்பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Aayirathil Iruvar is a Tamil Movie. Directed by Saran. Vinay, Samuthrika, Swasthika, Kesha in the lead roles. The Endrendrum Punnagai star actor Vinay plays a double role for the first time in his career.
Please Wait while comments are loading...