»   »  புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல இந்தி நடிகர் வினோத் கன்னா மரணம்

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல இந்தி நடிகர் வினோத் கன்னா மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்தி நடிகர் வினோத் கன்னா காலமானார்.

பிரபல இந்தி நடிகர் வினோத் கன்னா உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நீர்ச்சத்து குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்தனர்.

Actor Vinod Khanna passes away

மருத்துவமனையில் அவர் தனது மனைவி, மகனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. கன்னாவுக்கு புற்றுநோய் என்ற பேச்சு கிளம்பியது. இதை அவரது குடும்பத்தார் மறுத்தனர்.

Actor Vinod Khanna passes away

இந்நிலையில் அவ்ர சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார். அவருக்கு வயது 70. அவருக்கு கவிதா என்ற மனைவியும், ராகுல், அக்ஷய், சாக்ஷி ஆகிய மகன்களும், ஷ்ரத்தா என்ற மகளும் உள்ளனர்.

வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக ஆனவர் வினோத் கன்னா. அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

English summary
Veteran Bollywood actor Vinod Khanna passed away at a private hospital in Mumbai on thursday. He was 70.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil