Just In
- 4 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 4 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 6 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 6 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
மஹாராஷ்டிரா மாநில பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்... சமபலத்துடன் பாஜக -சிவசேனா -தேசியவாத காங்கிரஸ்..!
- Automobiles
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பேய் படம் முடிஞ்சதும் நான்காவது முறையா இவங்க இணைய போறாங்களாமே.. காமெடியா, ஆக்ஷனா? காமெடி ஆக்ஷனா?
சென்னை: நடிகரும் விஷாலும் சுந்தர்.சியும் நான்காவது முறையாக இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
சுந்தர் சி இயக்கத்தில், நடிகர் விஷால், மதகஜராஜா, ஆம்பள, ஆக்ஷன் என மூன்று படங்களில் நடித்துள்ளார்.
மதகஜராஜா படத்தில் அவர் ஜோடியாக, அஞ்சலி, வரலட்சுமி நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்தார்.
5வது நாளே இப்படியா.. தம்பியுடன் குடுமி பிடி சண்டையில் குதித்த பிரபல நடிகை.. தீயாய் பரவும் வீடியோ!

சந்தானம் காமெடி
ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரித்திருந்த இந்தப் படம், பைனான்ஸ் பிரச்னையால் வெளியாகவில்லை. இதையடுத்து ஆம்பள படத்தில் சுந்தர்.சியுடன் இணைந்தார், விஷால். ஹன்சிகா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் வரவேற்பை பெற்றது. சந்தானத்தின் டைமிங் காமெடி படத்துக்கு பலமாக இருந்தது. இந்தப் படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது.

பலத்த நஷ்டம்
இதையடுத்து இருவரும் 'ஆக்ஷன்' என்ற படத்தில் இணைந்தனர். மெகா பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தில், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, விஷால் ஜோடியாக நடித்திருந்தனர். டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்திருந்த இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியானது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பலத்த நஷ்டத்தை சந்தித்தது. இதையடுத்து விஷால், துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

சக்ரா
இந்தப் படத்தை மிஷ்கின் இயக்கி வந்தார். விஷாலுக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, மிஷ்கின் விலகினார். இதனால் விஷால் இயக்கி நடிக்கிறார். இந்தப் படத்தோடு எம்.எஸ் ஆனந்தன் இயக்கும் 'சக்ரா' படத்திலும் விஷால் நடித்து வருகிறார். இதில் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். இதில், ஸ்ரத்தா ஶ்ரீநாத், ரெஜினா காஸன்ட்ரா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

முத்தையா
இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இந்த இரண்டு படங்களையும் மிஷ்கின், தனது விஷால் பிலிம்பேக்டரி சார்பில் தயாரித்து வருகிறார். இதையடுத்து, முத்தையா இயக்கும் படத்தில் விஷால் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இது கிராமத்து கதை. இருவரும் ஏற்கனவே மருது படத்தில் இணைந்திருந்தனர்.

அரண்மனை 3
இயக்குனர் சுந்தர்.சி, அரண்மனை 3 படத்தை இயக்கி வருகிறார். இதில் இதில் ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார். ஹீரோயின்களாக, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் நடிக்கின்றனர். இந்தப் படங்களை இருவரும் முடித்த பின், மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளனர். அந்தப் படத்தை யார் தயாரிக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. இது காமெடி படமாக இருக்குமா? ஆக்ஷன் படமாக இருக்குமா? காமெடி ஆக்ஷனாக இருக்குமா?