Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 02 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் வேலையில் தலையிடாமல் இருப்பது நல்லது...
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
திருமணம் நின்றதால் பைத்தியம் போல புலம்பினேன்..மனம் திறந்த விஷால்!
சென்னை : நடிகர் விஷால், தனது திருமணம் நின்றதால், பைத்தியம் போல புலம்பினேன் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2004ஆம் ஆண்டில் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷால்.
அதனை அடுத்து அவர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, சத்யம், தோரணை, அவன் இவன், வெடி உள்பட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
தனுஷ் ஸ்கெட்ச்சில் சிக்கிய எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால்... எல்லாத்துக்கும் காரணம் இதுதானா?

நடிகர் விஷால்
நடிகர் விஷால் நடிப்பில் ஆக்ஷன்,எனிமி, வீரமே வாகை சூடும் போன்ற திரைப்படங்கள் வெளியாகின. எனிமி திரைப்படம் ஒரு வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட படமாக இருந்தாலும் அந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்திருந்தார் இருந்தாலும் படம் சுமார் என்று தான் சொல்லப்பட்டது.

பல கோடி நஷ்டம்
அடுத்தடுத்த தோல்விப்படங்களால் துவண்டு போன விஷால், அடுத்து வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டிய காட்டாயத்தில் இருந்ததால், லத்தி படத்திற்காக கடுமையாக உழைத்தார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ந் தேதி வெளியான இத்திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் வெறும் 2 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே வசூல் செய்தது. 23 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெறும் 3.40 கோடியை மட்டுமே வசூலித்து பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

என்னை பைத்தியம் என்றனர்
இந்நிலையில், நடிகர் விஷால் அளித்துள்ள பேட்டியில், தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். 2019 என் வாழ்க்கையில் மிகவும் மோசமான வருஷம், அனிஷாவை நான் காதலித்தேன் அதன் பிறகுதான் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அவர் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டார். திருமணம் நின்றதால், எனக்கு நானே பல முறை பேசிக்கொள்வேன் அதனால் என்னை பலர் பைத்தியம் என்று நினைத்தனர்.

எனக்கான நேரம் வரும்
எந்த காரியத்தையும் தைரியமாக துணிச்சலுடன் போராடி முடிப்பவன் நான், என் திருமணம் நின்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை எனக்கான நேரம் வரும் அதுவரை காத்திருப்பேன். நடிகர் சங்க கட்டிட வேலை முடிந்தவுடன் என் திருமணம் குறித்து நிச்சயம் உங்களுக்கு சொல்லுவேன் என்றார்.