புரட்சித் தலைவர் எம்ஜிஆர் உருவத்தை நெஞ்சில் பச்சைக் குத்திய புரட்சித் தளபதி விஷால்.. என்ன ஆச்சு?
சென்னை: நடிகர் விஷால் எம்ஜிஆரின் உருவத்தை தனது நெஞ்சில் பச்சைக் குத்தியுள்ள புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மீசை, தாடி என மொத்தத்தையும் ஷேவ் செய்து விட்டு புதிய தோற்றத்தில் பார்க்கவே வித்தியாசமாக உள்ளார் விஷால்.
சினிமாவில் நடிகராக இருக்கும் போதே தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என சினிமா அரசியலில் ஆர்வம் காட்டி வெற்றியும் பெற்றார் விஷால்.
சமீப காலமாக நேரடி அரசியலிலும் ஆர்வம் செலுத்தி வரும் விஷால் சமீபத்தில் பிரதமர் மோடியை பாராட்டி இருந்த நிலையில், அவரும் விஷாலுக்கு பதில் ட்வீட் போட்டிருந்தது பலரது கவனத்தை ஈர்த்தது.

லத்தியும் ஓடல
நடிகர் விஷால் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான அரை டஜன் படங்கள் தொடர்ந்து பெரும் தோல்வியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், கடைசியாக கடந்த ஆண்டு இறுதியில் ரொம்பவே உழைப்பை சிந்தி விஷால் நடித்திருந்த லத்தி திரைப்படமும் வெளியாகி சொதப்பியது. பொங்கலுக்கு சன் டிவியில் சிறப்பு திரைப்படமாகவே லத்தியை போட்டு விட்டனர்.

அரசியலில் ஆர்வம்
நடிகர் விஷால் இலவச ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பது. காசிக்கு சென்று பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியை புகழ்வது என தொடர்ந்து தனது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், இப்படியொரு டாட்டூ போட்டிருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

எம்ஜிஆர் டாட்டூ
புரட்சித் தலைவர் என மக்களால் கொண்டாடப்பட்ட நடிகரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் திருவுருவத்தை தனது நெஞ்சில் பச்சையாக குத்திக் கொண்டுள்ளார் புரட்சி தளபதி நடிகர் விஷால். சட்டை அணியாமல் நெஞ்சில் குத்தியிருக்கும் டாட்டூவை காட்டும் படி எடுத்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. எம்ஜிஆரின் தீவிர ரசிகரான விஷால் நீண்ட நாட்களாக இப்படியொரு டாட்டூவை குத்த வேண்டும் என நினைத்து வந்த நிலையில், தற்போது குத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆளே மாறிட்டாரு
லத்தி படத்திற்காக பெரிய மீசை எல்லாம் வைத்து நடித்த விஷால் தற்போது க்ளீன் ஷேவ் லுக்கில் மீசை, தாடி எல்லாம் இல்லாமல் நெஞ்சில் எம்ஜிஆர் உருவ டாட்டூவுடன் கொடுத்துள்ள போஸை பார்த்த ரசிகர்கள் ஆளே மாறிட்டாரே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

தளபதி 67ல் நடிக்கல
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய்க்கு வில்லனாக நடிக்க தளபதி 67 படத்தில் விஷாலை அணுகிய நிலையில், விஷால் அந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்து விட்டார். விஷாலுக்கு பதிலாக அர்ஜுன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மிஷ்கின், கெளதம் மேனன், சஞ்சய் தத், த்ரிஷா, ஜனனி என நடிகர்கள் பட்டாளமே அந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருமணம் எப்போது
நடிகர் விஷால் சமீபத்தில் இலவச திருமணம் செய்து வைத்தார். அப்போது அவரிடம் உங்கள் திருமணம் எப்போது என கேட்டதற்கு, விரைவில் காதல் திருமணம் செய்து கொள்வேன் என அறிவித்து இருந்தார். கூடிய சீக்கிரமே நடிகர் விஷால் யாரை காதலித்து வருகிறார் என அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











