twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சங்க உறுப்பினர்கள் 1500 பேருக்கு நடிகர் விஷால் உதவி... மளிகை சாமான்கள் வழங்கினார்

    By
    |

    சென்னை: நடிகர் சங்க உறுப்பினர்கள் சுமார் 1500 பேருக்கு நடிகர் விஷால் உதவி செய்துள்ளார்.

    Recommended Video

    VV Sneak Peek Break Down | Vishnu Vishal Upcoming project | Lock Down Diaries

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பாயும் கொரோனாவால் நோயாய் குலைந்த சினிமா.. தீபாவளிக்குத் தள்ளிப் போகிறதா விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ்?பாயும் கொரோனாவால் நோயாய் குலைந்த சினிமா.. தீபாவளிக்குத் தள்ளிப் போகிறதா விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ்?

    actor Vishal has helped 1500 actors union members

    இதனால் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். தினசரி சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். படப்பிடிப்புகள் இல்லாததால், திரைத்துறை ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

    அவர்களுக்கு உதவுவதற்காக, நடிகர், நடிகைகள் பணம் மற்றும் பொருட்களை அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் சங்கத்தில் கஷ்டப்படும் உறுப்பினர்களுக்கும் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பலர் அவர்களுக்கும் உதவி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷால், சென்னையை சார்ந்த சுமார் 1500 பேருக்கு ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்களை கொடுத்து உதவியுள்ளார்.

    actor Vishal has helped 1500 actors union members

    அதை நடிகர் ஶ்ரீமன் மற்றும் தளபதி தினேஷ் ஆகியோர் அனைவருக்கும் வழங்கினர். வெளியூர் உறுப்பினர்களுக்கும் வழங்குவதற்கான ஏற்பாடு செய்து வருகிறார்கள். 300 திருநங்கைகளுக்கும் மளிகை சாமான் கொடுக்கப்பட்டது.

    actor Vishal has helped 1500 actors union members

    மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு தொற்று நோய் தடுப்பதற்கான கையுறைகள், முக கவசங்களும் கொடுக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி செய்தார்.

    English summary
    actor Vishal has helped 1500 actors union members
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X