twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காலாவிற்காக வரிந்து கட்டும் விஷால்... ‘காவிரி பற்றி பேசியதில் என்ன தவறு?’ என டிவிட்டரில் கேள்வி!

    காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து நடிகர் விஷால் கருத்துத் தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    தூத்துக்குடிக்கு போன ரஜினிகாந்துக்கு நேர்ந்த மானபங்கம்...வீடியோ

    சென்னை: ரஜினியின் காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. அடுத்தமாதம் 7ம் தேதி இப்படம் ரிலீசாக இருக்கிறது.

    Actor Vishal reacts to Kaala ban in Karnataka

    இந்நிலையில், காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்ததால், அவரது 'காலா' திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட கன்னட‌ திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. இதற்கு அங்குள்ள தமிழ் அமைப்பினரும், ரஜினி ரசிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அந்தவகையில், நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "காவிரி விவகாரம் குறித்து ரஜினி சார் பேசியது கடமை மற்றும் அவரது பேச்சுரிமை. இதை காரணமாக வைத்து எப்படி கர்நாடகாவில் காலா படத்தை தடை செய்யலாம். இந்த பிரச்சினைக்கு கர்நாடகா பிலிம் சேம்பர் மற்றும் அதன் நிர்வாகிகள் உரிய தீர்வு தருவார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் நாம் அனைவருமே இந்தியர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Vishal, secretary of Nadigar Sangam has reacted to Kaala's ban in Karnataka.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X