»   »  காதல் திருமணம்தான் செய்வேன்... என் மனைவி லட்சுமிகரமானவர்: விஷால்

காதல் திருமணம்தான் செய்வேன்... என் மனைவி லட்சுமிகரமானவர்: விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடித்த உடன் அங்குள்ள மண்டபத்தில் முதல் திருமணம் என்னுடையதுதான் நடைபெறும் என்றும் நடிகர் விஷால் கூறியுள்ளார். தன்னுடையது காதல் திருமணம்தான் என்றும் லட்சுமிகரமான பெயர்கொண்டவர்தான் தனக்கு மனைவியாக வருவார் என்றும் விஷால் கூறியுள்ளார்.

சென்னையில் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டுகின்றனர். இதற்காக நட்சத்திர கிரிக்கெட் வரும் 17ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

Actor Vishal Reveals his Wedding Plans

இதற்கான முன்னோட்டமாக சன் டிவியில் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகிறது. நட்சத்திர சங்கமம், நடிகர்கள் சந்திப்பு என பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

இந்த வாரம் டப்மாஷ் செய்து நட்சத்திரங்கள் அசத்தினர். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வருமாறு கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த நட்சத்திரங்களை பட்டு சேலை, பட்டுவேட்டி கொடுத்து தமிழக நடிகர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

கன்னட நடிகர் யாஷ், நடிகர் விஷாலிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வியை முன் வைத்தார். அதற்கு விஷால், நான் 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறினார்.

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டி முடித்த பின்னர், அதில் உள்ள திருமண மண்டபத்தில் தன்னுடைய திருமணம் நடைபெறும் என்று கூறினார். உடனே அருகில் இருந்த நடிகை ரேகா, இது காதல் திருமணமா என்று கேட்க, ஆமாம், நான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன் என்றார்.

உடனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சங்கீதா, காதல் மனைவியின் பெயரை சொல்லுங்களேன் என்று கூற, லட்சுமிகரமான பெயர் கொண்டவர்தான் தனக்கு மனைவியாக வருவார் என்று விஷால் கூறினார்.

விஷாலின் இந்த அறிவிப்புக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற நட்சத்திரங்கள் அனைவரும் கரஒலி எழுப்ப, நடிகர் சிவகுமார், ஒரு வித்தியாசமான ரியாக்சன் கொடுத்தாரே பார்க்கலாம் அதுதான் ஹைலைட்.

English summary
Tamil actor Vishal, plans to get married after the completion of the construction of Nadigar Sangam building.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil