twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லோக்கல் கேபிள் டிவியில் படம் காட்டினால் அவ்வளவுதான்.. விஷால் வார்னிங்

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை தயாரிப்பாளர் சங்கமே பார்த்துக் கொள்ளும் என்று விஷால் அறிவித்துள்ளது தியேட்டர் உரிமையாளர்களை அதிர வைத்துள்ளது.

    தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், விஷால் அதன் தலைவராகப் பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அது யாருக்கு நல்லது, யாருக்கு கெட்டது என்பது இதுவரை தெளிவாகவில்லை.

    முதல்கட்டமாக 'திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான ஃபெப்சியுடன் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நாங்கள் விரும்பும் யாருடனும் வேலை செய்வோம்' என்று அறிவித்தது.

     வலுத்த எதிர்ப்புகள் :

    வலுத்த எதிர்ப்புகள் :

    அதை எதிர்த்து ஃபெப்சி வேலை நிறுத்தத்தில் இறங்கியது. ஆனால், டான்சர்ஸ் யூனியன் உள்பட சில சங்கங்களைச் சேர்ந்த முக்கியமான உறுப்பினர்கள், வேலை நிறுத்தத்தைப் புறக்கணிக்க முடிவுசெய்தனர். அதனால் சில படங்களின் படப்பிடிப்பைத் தவிர மற்ற படங்களின் ஷூட்டிங்குகள் வழக்கம்போல் நடந்தன. இதையடுத்து தன் நிலையிலிருந்து இறங்கி வந்த ஃபெப்சி, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றது.

     டெக்னீஷியன் யூனியன் நீக்கம் :

    டெக்னீஷியன் யூனியன் நீக்கம் :

    இந்நிலையில், 'பில்லா பாண்டி' என்ற படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக டெக்னீஷியன் சங்கத்தை, கூட்டமைப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறது ஃபெப்சி. "இது, தயாரிப்பாளர் சங்கம் எடுத்துவரும் உறுதியான நடவடிக்கைகளுக்கான முதல் வெற்றி' என்கிறார்கள் சில சங்க நிர்வாகிகள். ஆனால், 'இது ஃபெப்சியின் ஒருவித கண்துடைப்பு நாடகம்' என்கிறார்கள் கே.ராஜன் போன்ற சில தயாரிப்பாளர்கள்.

     அவசர ஆலோசனைக் கூட்டம் :

    அவசர ஆலோசனைக் கூட்டம் :

    இந்தச் சூழலில்தான் சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடக்கும் தயாரிப்பாளர் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கான அழைப்பிதழை ‘சினிமா முதலாளிகளே... ஒன்றுபட்டு வாருங்கள்' என்ற வாசகங்களுடன் தயாரிப்பாளர்களை அழைத்திருந்தனர். லோக்கல் கேபிள் சேனல்களில் திரைப்படங்கள், சினிமா பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள் ஒளிபரப்புவது தொடர்பாக விவாதிக்கப்படும் எனவும், சமீபத்திய படங்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

     அடுத்தடுத்து அதிரடி :

    அடுத்தடுத்து அதிரடி :

    முறையான உரிமம் இன்றி லோக்கல் கேபிள் டி.வி, பேருந்துகள், வேறு மாநில சேனல்களில் தமிழ்ப் படங்கள் ஒளிபரப்பப்படுவதைக் கண்காணிக்க, விஷால் ஒரு குழு அமைத்துள்ளார். 'உரிமம் இன்றி தமிழ்ப் படங்களை ஒளிபரப்பக் கூடாது. வேண்டுமானால், யாரிடம் உரிமம் இருக்கிறதோ அவர்களிடம் அனுமதி பெற்று படங்களை உங்கள் சேனலில் ஒளிபரப்ப வேண்டும். இல்லையென்றால், சங்கத்தின் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று விஷால் அறிவிப்பார்' என்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள்.

     விஷால் நடவடிக்கை

    விஷால் நடவடிக்கை

    விஷாலின் இந்த நடவடிக்கைகளுக்கு அவரின் எதிர் முகாமைச் சேர்ந்த தயாரிப்பாளர்களே ஆதரவு தெரிவித்துள்ளனர். 'இதுபோன்ற சூழல்கள் முன்பு ஏற்பட்டபோது முந்தைய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அதிரடி காட்டாமல் அமைதி காத்ததால்தான் தயாரிப்பாளர்களின் உரிமைகளும் உடைமைகளும் பறிபோகக் காரணம்' என்கிறார்கள் விவரம் அறிந்த நிர்வாகிகள்.

     ஆன்லைன் டிக்கெட் புக்கிங் :

    ஆன்லைன் டிக்கெட் புக்கிங் :

    கூட்டம் முடிந்த நிலையில், ஆன்லைன் டிக்கெட் பற்றிய முக்கிய அறிவிப்பை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் விஷால். அதாவது கூடிய விரைவில் தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் ஆன்லைன் புக்கிங் இணையதளத்தை வெளியிடவுள்ளது, எங்களது ஆன்லைனில் புக் செய்தால் ரசிகர்களுக்கு புக்கிங் சார்ஜஸ் 10 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும். அந்த 10 ரூபாயும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, ஆன்லைன் டிக்கெட் இணையதளத்தின் பராமரிப்பு, தயாரிப்பாளர்களின் நன்மைக்கு, விவசாயிகளின் நன்மைக்கு எனப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Vishal has announced that Producers conusil will take care of the Online movie ticket booking activities soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X