»   »  அன்புச்செழியனுக்கு ஆதரவாக யார் வந்தாலும் விட மாட்டோம்.. அசோக்குமார் மரணம் குறித்து விஷால் பேட்டி

அன்புச்செழியனுக்கு ஆதரவாக யார் வந்தாலும் விட மாட்டோம்.. அசோக்குமார் மரணம் குறித்து விஷால் பேட்டி

Posted By: Shyamsundar
Subscribe to Oneindia Tamil
கந்துவட்டி கும்பலுக்கு விரைவில் முடிவு கட்டுவோம்- நடிகர் விஷால்- வீடியோ

சென்னை: சசிகுமார் உறவினர் அசோக்குமார் மரணத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷால் பேட்டி அளித்து இருக்கிறார். அசோக்குமார் தன் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கும் அன்புசெழியன் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இவர் தன் தற்கொலை குறித்து கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் தன் தற்கொலைக்கு அன்புசெழியன் என்பவர்தான் காரணம் என்று கூறியுள்ளார்.

Actor Vishal talks about Ashok Kumar sucide

இந்த நிலையில் இவரது மரணத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விஷால் கோரிக்கை விடுத்து இருக்கிறார். மேலும் அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணமான அன்புசெழியன் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

அதே போல் ''கந்துவட்டியால் நான், பார்த்திபன், கவுதம் மேனன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டோம். ஆகவே அன்புச்செழியனுக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என யார் வந்தாலும் விட மாட்டோம்'' என்று கோவமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருக்கிறார்.

மேலும் சினிமா துறையில் கந்துவட்டியால் கஷ்டப்படும் பலரின் கடனை நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைவரும் சேர்ந்து அடைக்க வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.

English summary
Sasikumar relative Ashok committed sucide in Chennai. Actor Vishal talks about Ashok Kumar sucide. He need immediate action from police. He also wants police to arrest Anbuchezhiyan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil