»   »  தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் அதிரடி சஸ்பெண்ட்!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் அதிரடி சஸ்பெண்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்பட நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

திரைப்பட நடிகரான விஷால் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அவர் விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த பேனரில் 6 படங்களை இதுவரை விஷால் தயாரித்துள்ளார்.

Actor vishal today suspended from TN Producer council.

நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் உள்ள விஷால் அண்மையில், வார இதழ் ஒன்றுக்கு தந்த பேட்டியில் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக உள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, விஷால் வார இதழுக்கு அளித்த பேட்டி குறித்து தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், விஷால் தரப்பில் இருந்து திருப்தி அளிக்கும்படி பதில் அளிக்காததால் அவரை நீக்கி தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டு, தற்போது தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:.

தயாரிப்பாளர் திரு.விஷால் அவர்கள் கடந்த 17/08/2016 அன்று ஆனந்த விகடன் வார இதழில் அளித்த பேட்டி சங்கத்தின் ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் சீர்குலைக்கும் செயலாக இருந்தது. மேலும், இதுபோல் தொடர்ந்து அவர் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக பலமுறை நடந்து கொண்டதை குறிப்பிட்டு, அவருக்கு கடந்த 02.09.2016 அன்று தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில், 12.11.2016 அன்று நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்ததில், திருப்தியாக அமையாத பட்சத்தில், செயற்குழு கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி, சங்கவிதி எண் 14-D-யில் உள்ளபடி M/S Vishal Film Factory நிறுவனத்தின் உரிமையாளர் திரு. வீஷால் அவர்கள் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இன்று முதல் (14.11.2016) தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Actor vishal today suspended from TN Producer council.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil