Don't Miss!
- News
"தமிழ்நாட்டின் நலன் உங்கள் கையில்" அதிமுக தொண்டர்களை அலர்ட் செய்யும் திருமாவளவன்!
- Sports
விறுவிறுப்புக்கு நோ பஞ்சம்.. இந்தியா - நியூசி, முதல் டி20 போட்டி.. விருந்து படைக்கும் ராஞ்சி பிட்ச்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மௌனத்தை கலைக்கும் நேரமிது... எஃப்ஐஆர் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஷ்ணு விஷால்!
சென்னை : நடிகர் விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
விஷ்ணு விஷால் தயாரித்துள்ள இந்த படம் பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன்னுடைய மௌனத்தை கலைக்கும் நேரம் வந்துவிட்டதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
29
வருட
சினிமா
பீஸ்ட்..
வைரலாகும்
தளபதி
விஜய்யின்
செம
கேஷுவல்
க்ளிக்..
கொண்டாடும்
ரசிகர்கள்!

நடிகர் விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது ராட்சசன் படம் அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. படத்தில் காவலராக நடித்திருந்த அவர் சைக்கோ கொலையாளியின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவரை கண்டுபிடிப்பதாக படம் செல்லும். சிறப்பான திரைக்கதையுடன் இந்த படம் வெளிவந்தது.

சைக்கோ த்ரில்லர் அனுபவம்
சிறப்பான சைக்கோ த்ரில்லர் படத்தின் அனுபவத்தை இந்தப் படம் நமக்கு கொடுத்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு சிறப்பாக அமைந்திருந்தது. சைக்கோ த்ரில்லர் தன்னுடைய சொந்த குடும்பத்திலேயே கைவரிசை காட்டுவது அதற்காக விஷ்ணு விஷால் ரியாக்ட் செய்வதும் என படம் சிறப்பாக செல்லும்.

எஃப்ஐஆர் படம்
இந்நிலையில் அடுத்ததாக விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்துள்ளார். நீண்ட நாட்களாக இந்த படம் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போய் இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதத்தில் வெளியீடு
பிப்ரவரி மாதத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படம் ரிலீசாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த படம் குறித்து நீண்ட நாட்களாக மௌனம் காத்ததாகவும் தற்போது மௌனத்தை கலைக்கும் நேரம் வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மனு ஆனந்த் இயக்கம்
படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், மௌனிகா, கௌதம் மேனன் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். படத்தை எழுதி இயக்கியுள்ளார் மனு ஆனந்த்.

மறைந்து வாழும் குற்றவாளி
இந்தப்படத்தில் போலீசாரிடம் இருந்து தப்பித்து மறைந்து வாழும் குற்றவாளியாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார். அதற்கான காரணங்களை கதைக்களமாகக் கொண்டுள்ளது இந்த படம். அதற்கு பொருத்தமாகவே எஃப் ஐ ஆர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ்
இந்நிலையில் படம் பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் ஆவது குறித்து நாயகி மஞ்சிமா மோகன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் ரிலீசுக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ராட்சசன் படம் விஷ்ணு விஷாலுக்கு சிறப்பாக அமைந்த நிலையில் தற்போது அதே திரில்லர் வகையறாவில் இந்த படம் ரிலீசாவது அவரது ரசிகர்களை குஷி ஆக்கி உள்ளது.