அந்த மனசு தான் சார் கடவுள்.. விஷ்ணு விஷால் 2வது மனைவி பார்த்த வேலை.. ஊரே பாராட்டுதே!
சென்னை: பேட்மிண்ட்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா, கடந்த 2021ஆம் ஆண்டுநடிகர் விஷ்ணு விஷாலை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நான்கு ஆண்டுகள் கழித்து கடந்த ஏப்ரல் மாதம் பெண் குழந்தை பிறந்த நிலையில்,தாய்பாலை தானமாக அளித்து வருகிறார். அவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜீவா, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் என தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடித்த "வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்" திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஷ்ணு விஷால், பேட்மிண்ட்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குவியும் பாராட்டு: அவர்களுக்கு நான்வது திருமண நாளில் பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் தந்தையான மகிழ்ச்சியான தேசியை நடிகர் விஷ்ணு விஷால் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். இவர்களின் குழந்தைக்கு பாலிவுட் நடிகர் அமீர் கான், மிரா என பெயர் வைத்தார். இந்நிலையில், ஜூவாலா கட்டா, தனது தாய்பாலை தானமாக கொடுத்து வருகிறார். அதாவது, அரசு மருத்துவமனையில் தினமும் 600 மில்லி தாய்பாலை அவர் தானம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தாய் இன்றி ஆதரவில்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு ஒரு தாயாக உதவும் வகையில் ஜூவாலா கட்டா இந்த செயலை செய்து வருகிறார். ஜூவாலா கட்டா, இதுவரை அவர் சுமார் 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல பல தாய்மார்கள் தானம் கொடுத்து வந்தாலும், ஒரு விளையாட்டு வீராங்கனை மற்றும் பிரபலமான ஒருவர் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ஜுவாலா கட்டாவின் இந்த செயலை பலரும் பாராட்டி அந்த மனசு தான் சார் கடவுள் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











