Aaryan Day 2 colletion: விஷ்ணு விஷாலின் ஆர்யன்.. 2ம் நாள் வசூல் எவ்வளவு தெரியமா?
சென்னை: அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில், விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ஆர்யன். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. அப்படம் 31ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விஷ்ணு விஷால் நடித்த ராட்ச்சன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்திற்கு பின் க்ரைம் த்ரில்லர் திரைப்படத்திற்கு விஷ்ணு விஷால் பெருத்தமானவர் என்று சொல்லும் அவளவிற்கு அவர் நடித்த எஃப்.ஐ.ஆர் திரைப்படம் இருந்தது. தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில், ஆர்யன் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

ஆர்யன் படத்தின் கதை: எழுத்தாளராக இருக்கும் செல்வராகன் இந்த சமூதாயத்தில் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காததால் விரக்தியில் இருக்கிறார். இதனால், ஒரு முன்னணி தொலைகாட்சியில் நடக்கும் ஒரு விவாத நிகழ்ச்சிக்குள் புகுந்து அங்கு இருப்பவர்களை பிணைக்கைதியாக்குகிறார். நேரலையில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த இளம் நடிகரை துப்பாக்கியால் சுடுகிறார். தான் எழுதிய கதையின்படி அடுத்த ஐந்து நாட்களில் ஐந்து கொலைகளை தான் செய்ய இருப்பதாகவும், அதில் ஒரு கொலை இப்போதே இந்த அரங்கிலேயே நடக்கப் போகிறது என்று சொல்லிவிட்டு துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.
சிறப்பான நடிப்பு: கொலையாளியே இறந்துவிட்ட பிறகு அவர் சொன்னபடி எப்படி கொலைகள் நடக்கும் என்று போலீஸார் தலையை பிய்த்துக் கொண்டு இருக்க, இந்த வழக்கு போலீஸ் அதிகாரியான விஷ்ணு விஷாலிடம் ஒப்படைக்கப்படுகிறது. செல்வராகவன் சொன்னது போல அந்த கொலைகள் நடந்ததா? ஹீரோவின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட வழக்கு என்ன ஆச்சு என்பது தான் ஆர்யன் திரைப்படத்தின் கதை. விஷ்ணு விஷால் இசை வெளியீட்டு விழாவில் சொன்னது, 'ராட்சசனுக்கு' முற்றிலும் மாறுபட்டதாக இப்படம் இருக்கும் என சொல்லி இருந்தார். அதுபோலவே இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.'
இரண்டாம் நாள் வசூல்: இப்படம் அக்டோபர் 31ந் தேதி தியேரில் வெளியாகி முதல் நாள் ரூ 1.2 கோடியை வசூலித்தது, இதையடுத்து நேற்று சனிக்கிழமை என்பதால் படத்தின் வசூல் ரூ. 1.54 கோடியாக உள்ளது. மொத்தத்தில் படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.2.74 கோடியை வசூலித்துள்ளது. படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருப்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பு நவம்பர் 7ந் தேதி வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











