»   »  'ஊருக்காக வாழும் கலைஞன் தன்னைக் கொடுப்பான்..' - படப்பிடிப்புக்குத் திரும்பினார் விவேக்!

'ஊருக்காக வாழும் கலைஞன் தன்னைக் கொடுப்பான்..' - படப்பிடிப்புக்குத் திரும்பினார் விவேக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

யாருக்கும் நேரக் கூடாத மிகப் பெரிய துக்கத்திலிருந்து மீண்டு படப்பிடிப்புக்குத் திரும்பினார் நகைச்சுவைக் கலைஞர் விவேக்.

சமீபத்தில் விவேக்கின் 13 வயது மகன் பிரசன்னா காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரசன்னா, சிகிச்சை பலனின்றி அக்டோபர் 29ம் தேதி உயிரிழந்தார். இதனால் விவேக்கும் அவரது குடும்பமும் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்தது.

Actor Vivek back to shooting

மகன் பிரிவினால் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்த விவேக், தற்போது மீண்டும் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும்போது, "நான் என் மகன் பிரிவில் இருந்து வெளியே வந்துவிட்டேன். அதாவது மீண்டும் நான் எனது பழைய வாழ்க்கைக்கு திரும்பி உள்ளேன். வழக்கம் போல் நாளையில் இருந்து நான் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளேன்," என்று கூறியுள்ளார்.

Actor Vivek back to shooting

ட்விட்டரில், "ஊருக்காக வாழும் கலைஞன் தன்னை கொடுப்பான்; தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்- Msv vairamuthu & ARR! Great truth.now i feel it," என்று கூறி, தான் படப்பிடிப்புக்கு மீண்டும் செல்வதை அறிவித்துள்ளார்.

English summary
Actor Vivek is back to normal and going to shooting after his son's death.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil