'பாபநாசத்தால் தான் என் படம் நாசமானது'... கமல் மீது விவேக் மீண்டும் பரபரப்பு புகார்!

நடிகர் விவேக், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் மீது மீண்டும் குற்றச்சாட்டு கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Recommended Video

கமலின் பாபநாசம் படத்தால் தான் தனது படம் நாசமானது- விவேக் பரபரப்பு புகார்

சென்னை: கமலின் பாபநாசம் படத்தால் தான் தனது படம் நாசமானது என நடிகர் விவேக் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் வெள்ளைப் பூக்கள். விவேக், சார்லி, பூஜா தேவாரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 19ம் தேதி ரிலீசாகிறது.

இதையொட்டி படக்குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விவேக், கமலின் பாபநாசம் படத்தால் தான் தனது படம் நாசமானது என குற்றஞ்சாட்டினார்.

தரமான படம் வெள்ளைப் பூக்கள்

தரமான படம் வெள்ளைப் பூக்கள்

இதுகுறித்து அவர் பேசியதாவது, " வெள்ளைப் பூக்கள் ஒரு தரமான படம். மகேந்திரனின் உதிரிப்பூக்கள் எப்படி டிரெண்ட் செட்டராக அமைந்ததோ, அதேபோல் தான் வெள்ளைப் பூக்களும் டிரெண்ட் செட்டராக அமையும். இந்த படத்தின் இயக்குனர் விவேக் இளங்கோவனுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

பெரிய ஹிட்

பெரிய ஹிட்

நான் காமெடியனாக நடித்த பல படங்கள் பெரிய ஹிட்டாகி இருக்கின்றன. எனது காமெடிக்காகவே ஓடியிருக்கின்றன. ஆனால் ஹீரோவாக நடித்த படங்கள் நிறைய பிரச்சினைகளை சந்தித்தன. அதை நான் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கூறினேன். ஆனால் அவர்கள் விடாப்பிடியாக நின்று என்னை நடிக்க வைத்தனர்.

பாபநாசத்தால் நாசமானது

பாபநாசத்தால் நாசமானது

என் திரை வாழ்க்கையில் மிகச் சிறந்த படமாக அமையும் என நான் நினைத்த படம் 'இவன் தான் பாலா'. ஆனால் அந்த பட ரிலீசின் போது கமலின் பாபநாசம் திடீரென வந்து எனது படத்தை நாசம் செய்துவிட்டது. உடனே நான் கமலுக்கு எதிராக பேசுகிறேன் என நினைக்க வேண்டாம். நடந்ததை தான் கூறுகிறேன். இந்த படத்தில் அது போன்ற பிரச்சினைகள் வராது என படக்குழுவினர் நம்பிக்கை அளித்துள்ளனர்.

அமெரிக்காவில் படப்பிடிப்பு

அமெரிக்காவில் படப்பிடிப்பு

வெள்ளைப் பூக்கள் படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் சியாட்டல் நகரில் தான் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் ஒரு குற்றச்செயலில் நான் என்னை தானாக புகுத்திக்கொண்டு செயல்படுவேன். இதுதான் படத்தின் கதை. படம் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்", என விவேக் கூறினார்.

More from Filmibeat

Read more about: vivek விவேக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X