twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழகம் முழுவதும் 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் காமெடியன் விவேக்

    By Sudha
    |

    Vivek
    திருச்சி: தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மரங்களை வளர்க்க முடிவு செய்திருப்பதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

    திருச்சியில் யூத் எக்ஸ் னோரா இன்டர் நேசனல் அமைப்பு மற்றும் நடிகர் விவேக் ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம், பேசிய வி வேக், “ இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் 100 கோடி மரக்கன்று நடவேண்டும். தமிழ் நாட்டில் 100 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து உள்ளோம். டிசம்பர் 2011க்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்து இதற்காக மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம். வனத்துறை அமைச்சர், சமூக நல ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவிகளையும் நாடி வருகிறோம் என்று கூறினார்.

    நான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்த போது மரங்களின் நிலமை பற்றி ஒரு கவிதை புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அதில் மரம் தனது அவலநிலைப்பற்றி கூறுவதுபோல கவிதை இருந்தது. அதுதான் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற காரணம் என்றும் விவேக் தெரிவித்தார்.

    நான் அடுத்து கந்தா படத்தில் நடித்து வருகிறேன். இதில் மரங்களை அழித்து ரியல் எஸ்ட்டேட்டில் நிலத்தை விற்ற விவசாயி கடைசியில் சித்தாளாக மாறியதுடன் இலவச அரிசிக்கு வரிசையில் காத்திற்கும் அவலம் பற்றி கூறியுள்ளேன். மரங்களை வளர்த்தால் தான் எதிர்காலம் வளமாகும்"" என்று கூறினார்.

    English summary
    Youth X nora International Organization and actor Vivek’s fan club to plant 10 lakhs free tree saplings in TN. Vivek told this in a pressmeet in Trichy recently.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X