»   »  "அப்பப்பப்பா போதும்ம்பா.. அன்னைக் காவிரி வேணும்ப்பா!" - விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகரின் கவிதை

"அப்பப்பப்பா போதும்ம்பா.. அன்னைக் காவிரி வேணும்ப்பா!" - விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகரின் கவிதை

Posted By:
Subscribe to Oneindia Tamil
காவேரி பற்றிய வைரலாகும் விவேக்கின் கவிதை

சென்னை : நடிகர் விவேக் தனது திரைப்படங்களில் சமூக கருத்துகளைக் கூறுபவர். நகைச்சுவையாக அவர் கூறும் வசனங்கள் பல சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பவை. அரசியல், சமூகம், சாதி மறுப்பு பற்றிய இவரது நகைச்சுவைக் கருத்துகள் நல்ல வரவேற்பைப் பெற்றவை.

திரைப்படங்களில் நடிப்பது குறைந்ததை அடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது இதுபோன்ற கருத்துகளை பதிவிட்டு வருகிறார். காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

Actor Vivek poetry on Cauvery issue

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், விவேக் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

"நாங்கள் கேட்பது நீரப்பா!
நீங்கள் தருவதோ சூரப்பா!
அண்ணன் தம்பிகள் நாமப்பா!
நம்மைப் பிரிப்பது நீராப்பா!
அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா!
அன்னைக் காவிரி வேணும்ப்பா..!"

இவ்வாறு காவிரி விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை நகைச்சுவையாக வெளியிட்டுள்ளார். அவரது கருத்துக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இன்னும் தொடர்ந்து குரல் கொடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

English summary
Actor Vivek posted a poetry about Cauvery issue on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X