»   »  சீனப் பொருட்களை வாங்க வேண்டாம்!- நடிகர் விவேக் வேண்டுகோள்

சீனப் பொருட்களை வாங்க வேண்டாம்!- நடிகர் விவேக் வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சீனப் பொருட்களை முற்றிலும் தவிர்ப்போம்... இந்தியப் பொருட்களையே வாங்குவோம் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் போர்ச் சூழல் உருவாகியுள்ளது. காரணம் பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள்.

Actor Vivek raises voice against Chinese products

ஆனால் சீனா அரசோ உண்மையான சூழ்நிலை தெரியாமல் பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், "தற்போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரம்ம புத்திராவின் கிளை நதியை இந்தியாவிற்கு வரவிடாமல் தடுத்துள்ளது.

விழித்துக்கொள்வோம் நாம்! இனி சீனா பொருட்கள் வேண்டாம்! இந்திய உற்பத்திகளையே உபயோகிப்போம்!

இதற்கு நாம் தக்க பதிலடி கொடுக்கவேண்டுமென்றால் வரும் தீபாவளிக்கு சீன பட்டாசுகள் சுமார் 3000 கோடி அளவிற்கு இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதை தயவு செய்து யாரும் வாங்க வேண்டாம்," என கூறியுள்ளார்.

Read more about: vivek, விவேக்
English summary
Actor Vivek has raised his voice against Chinese products and appealed public not to purchase the same.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil