Don't Miss!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அவர் படத்தால் நஷ்டமடைந்தேன்.. கமலை மறைமுகமாக விமர்சித்த விவேக்!
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் படத்தால் தனது படம் நஷ்டமடைந்தது என காமெடி நடிகர் விவேக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கியுள்ள படம் எழுமின். நடிகர் விவேக், நடிகை தேவயானி உள்ளிட்டோர் ஆறு சிறுவர்களுடன் சேர்ந்து நடித்துள்ள இந்த படம், தற்காப்பு கலையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. நடிகர்கள் சிம்பு, விஷால், கார்த்தி, விவேக், உதயா, நடிகை தேவயானி, இயக்குனர் விஜி உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.
நடிகர் சிம்பு டிரெய்லரை வெளியிட்டார். படத்தில் நடித்துள்ள சிறுவர்கள் விழா மேடையில் தற்காப்பு கலைகளை நிகழ்த்தி காட்டினர். நடிகர் விஷால் இதனை கொடியசைத்து துவக்கி வைத்தார். படக்குழு சார்பில் திருப்பத்தூர் வீரவிளையாட்டு கலைக் கூடத்துக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை நடிகர் கார்த்தி அவர்களிடம் வழங்கினார்.
விழாவில் பேசிய விவேக் தான் நடித்த பாலக்காட்டு மாதவன் படத்துக்கு நேர்ந்த கொடுமை பற்றி பரபரப்பாக பேசினார்.
விழாவில் அவர் பேசியதாவது, " எனது அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ள சிம்பு, விஷால், கார்த்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இந்த படம் விளையாட்டுத்துறையில் ஏழை மாணவர்கள் எந்தளவுக்கு அழுத்தப்படுகிறார்கள் என்பது பற்றி பேசும். பொருளாதாரா ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் விளையாட்டுத்துறையில் உள்ள பிரச்சினைகள் பற்றி பேசுகிறது.
இன்றைக்கு சினிமாவின் நிலை மாறிவிட்டது. யோகிபாபுவுக்கு நயன்தாரா கிடைக்குறாங்க. ஒருகாலத்துல சிம்புக்கு கிடைச்சவங்க. நான் வல்லவன் படத்துல கிடைச்சத பற்றி சொல்றேன்.
எனது படம் பாலகாட்டு மாதவன் சூப்பரான காமெடி படம். நல்லா ஓடி இருக்க வேண்டிய படம். ரீலிசுக்கு எல்லாம் தயாராக இருந்தபோது, திடீரென ஒரு பெரிய நடிகரின் படத்தை 15 நாட்களுக்கு முன்கூட்டியே ரிலீஸ் செய்தாங்க. நான் எவ்வளவோ கேட்டும் மறுத்துட்டாங்க. பாகுபலி (முதல் பாகம்) ரிலீஸாய்டுமோன்னு பயந்து 15 நாள் முன்னாடியே வெளியிட்டாங்க. இதனால் எனது படத்திற்காக பேசப்பட்டிருந்த தியேட்டர்கள் அப்படியே சுருங்கிப் போய் விட்டன. அன்றைக்கு தயாரிப்பாளர் சங்கத்துல சிறு தயாரிப்பாளர்களுக்காக பேச ஆள் இல்லை. அதனால் அந்த படம் நஷ்டம் அடைந்தது.
அப்புறம் எப்படி இந்த தயாரிப்பாளர் மீண்டும் படம் எடுக்க வருவார். ஆனால் இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது. விஷால் தலைமையிலான சங்க உறுப்பினர்கள் சிறு தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
அதர்வாவிடம் பேசி மே 25ம் தேதி ரிலீஸ் ஆக வேண்டிய அவரது படத்தை தள்ளி வைத்துவிட்டு, சிறு பட்ஜெட் படங்களை வெளியிடுகிறார்கள். இது நல்ல விஷயம். எங்கள் படத்துக்கும் இதுபோல் உதவ வேண்டும்"
இவ்வாறு நடிகர் விவேக் பேசினார்.
அவர் குறிப்பிட்டது போல் பாலக்காட்டு மாதவன் படம் 2015ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி ரிலீசானது. அதே நாளில் தான் கமலின் பாபநாசம் படம் வெளியானது. எனவே விவேக் நேரடியாக பெயரை குறிப்பிடாவிட்டாலும், கமலை தான் அவர் நேரடியாக குறிப்பிடுகிறார் என்பது தெரியவந்துள்ளது.
நடிகர் விவேக் இவ்வாறு பேசியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .