Just In
Don't Miss!
- News
திமுக பொதுக்குழு, மாநில மாநாடு ஒத்திவைப்பு.. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு
- Automobiles
இந்தியாவில் அடுத்தடுத்த அறிமுகமாகும் எலக்ட்ரிக் பைக்குகள்!! மிக விரைவில் ஒகி100 அறிமுகமாகிறது...
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தாயை போற்றுபவர்கள் வாழ்வில் உயர்வார்கள்.. கலைமாமணி சிவகார்த்திகேயனை வாழ்த்திய விவேக்!
சென்னை: தாயை போற்றுபவர்கள் வாழ்வில் உயர்வார்கள் என நடிகர் சிவகார்த்திகேயனை வாழ்த்தி உள்ளார் விவேக்.
தமிழக அரசு சார்பாக சனிக்கிழமை மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இயல் இசை நாடகத் துறையில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை வழங்கினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!
நடிகர் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் கெளதம் மேனன், காமெடி நடிகர் யோகி பாபு, பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, செளகார் ஜானகி என பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

பாராட்டும் திரையுலகம்
நடிகர் சிவகார்த்திகேயன் கலைமாமணி விருதை பெற்றுள்ள நிலையில், ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் அவரை பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்றனர். தமிழக முதல்வர் பழனிசாமியிடம் கலைமாமணி விருது வாங்கிய சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

அம்மா காலில் விழுந்து
கலைமாமணி விருதை பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் தனது அம்மா காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அம்மா அப்பாவுக்கு பெருமை சேர்த்து விட்டார் சிவகார்த்திகேயன் என்றும் எந்த நிலைக்கு சென்றாலும் பெற்றோர்களை பிள்ளைகள் மறக்கக் கூடாது என்றும் பாராட்டி வருகின்றனர்.

தாயை போற்றுபவர்கள்
டியர் சிவகார்த்திகேயன்! தாயை போற்றுபவர்கள் வாழ்வில் உயர்வார்கள் என்பதற்கு புரட்சித் தலைவர், இசைஞானியில் இருந்து நீங்கள் வரை உதராணம்! இதை இளையோர் பின் பற்ற வேண்டும் என அனிருத், விக்னேஷ் சிவன், மற்றும் அருண் ராஜா காமராஜுக்கு டேக் செய்து கலைமாமணி விருது பெற்ற சிவகார்த்திகேயனை நடிகர் விவேக் மனதார வாழ்த்தி உள்ளார்.

பொண்ணு எடுத்த போட்டோ
அப்பா போட்டோவுக்கு அருகே அம்மா காலில் விழுந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஆசி பெறும் இந்த போட்டோவை எடுத்தது யாரு தெரியுமா நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா தான். புகைப்படத்தில் இருக்கும் கண்ணாடியில் "அந்த வாயாடி பெத்த புள்ள" நிற்பதை ஜூம் செய்து பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும்.

அரசியல் ஆசை
கலைமாமணி விருது பெற்ற நடிகர் சிவகார்த்திகேயனிடம் பத்திரிகையாளர்கள் கோட்டைக்கு வந்து விருது வாங்கிட்டீங்க, கோட்டையை பிடிக்க ஆசை இருக்கா என கேள்வி எழுப்ப? சிரித்துக் கொண்டே பதில் அளித்த சிவகார்த்திகேயன், சாதாரண குடிமகனாக கோட்டைக்கு வர ஆசை. மற்றபடி அரசியல் பற்றி என்னிடம் கேட்பதே பெரிய விஷயம் என்று எஸ்கேப் ஆகிவிட்டார். காமெடியன், தொகுப்பாளர், நடிகர், ஹீரோ, நட்சத்திரம், கலைமாமணி அடுத்தது அரசியல் தானே என பலரும் சிவகார்த்திகேயனை கிண்டல் செய்தும் வருகின்றனர்.