கில்லி போல சொல்லி அடித்த யாஷ்...செம டிரெண்டிங்காகும் யாஷின் மாஸ் பேச்சு வீடியோ
சென்னை : கேஜிஎஃப் 2 படம் இன்று வசூலில் சக்கை போடு போடும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்து, கன்னட சினிமா பற்றி நடிகர் யாஷ் பேசிய மாஸ் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகிறது.
டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018 ம் ஆண்டு யாஷ் நடித்த படம் கேஜிஎஃப். ஹம்பாலே ஃபிலிம்ஸ் 80 கோடி செலவில் இந்த படத்தை தயாரித்தது. கேங்ஸ்டரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்று 250 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்தது.

100 பதில் 1000 கோடி
இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக கேஜிஎஃப் 2 படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் நேற்று வரை 1006 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. ஏற்கனவே பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்த கேஜிஎஃப் 2, இந்த வார இறுதியில் அமீர்கானின் டங்கள் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த குறி பாகுபலி 2
இந்திய படங்களில் அதிக வசூலை பெற்ற படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பாகுபலி 2 படத்தின் சாதனையையும் விரைவில் கேஜிஎஃப் 2 நெருங்க உள்ளது. இதற்கிடையில் கேஜிஎஃப் 2 படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் மேக்கிங் வீடியோவை ஹம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. கேஜிஎஃப் 3 வேறு இயக்கப்பட உள்ளதால் கேஜிஎஃப் 2 படத்தின் மீதான ஈர்ப்பை படக்குழு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சொல்லி அடித்த யாஷ்
இந்நிலையில் கேஜிஎஃப் 2 படத்தில் ஹீரோ ராக்கி பாயாக வந்து திரையில் தீப்பிடிக்க வைத்த நடிகர் யாஷ், சில ஆண்டுகளுக்கு முன் சினிமா விழா ஒன்றில் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கன்னட சினிமா வேற லெவலுக்கு போக உள்ளது. ஒட்டுமொத்த உலகமே கன்னட சினிமாவை திரும்பி பார்த்து, கொண்டாடும் என பேசி உள்ளார். அவர் அன்று சத்தியம் பண்ணி சொன்ன விஷயம் இன்று நிஜமாகி உள்ளது.

ராக்கி பாய் என்னப்பா ஆவார்
இன்று அடைய போகும் பிரம்மாண்ட வெற்றியை அன்று சொன்னதுடன், சொன்னபடியே செய்தும் காட்டி விட்டார் யாஷ். இதுவரை கன்னட ரசிகர்கள் மட்டும் கொண்டாடி வந்த யாஷ், இன்று பான் இந்தியன் நடிகராக பல மொழி சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்படும் ஹீரோவாக மாறி விட்டார். கேஜிஎஃப் 2 படத்தை கொண்டாடி வரும் அதே வேளையில் கேஜிஎஃப் 3 படத்தின் கதை என்னவாக இருக்கும், அடுத்து ராக்கி பாய் என்ன ஆவார், கடலில் மூழ்கிய ராக்கி பாய் இறந்து விடுவாரா என ஆவலாக கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











