»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள், நடிகர் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கலாம் என்று தென்னிந்திய நடிகர்சங்கம் முடிவு செய்துள்ளது.

அரசியல் கட்சிகளில் தீவிரமாக இருப்பவர்கள், நடிகர் சங்கப் பொறுப்புகளில் இருக்கக் கூடாது. ஏதாவது ஒருபொறுப்பில் தான் அவர்கள் இருக்க வேண்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் கூறினார்.

சரத்குமார் ஆலோசனையின் பேரில் தான் அவர் கருத்து வெளியிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜயகாந்த் கருத்து குறித்து விவாதிக்க நடிகர் சங்க செயற்குழுவின் அவசரக் கூட்டம் நடிகர் சங்கவளாகத்தில் நடந்தது. ஷூட்டிங்கிற்காக அவசரமாக சென்று விட்டதால் விஜயகாந்த் இதில் கலந்துகொள்ளவில்லை.

பொதுச் செயலாளர் சரத்குமார் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான நடிகர்கள் கலந்துகொண்டனர். இதில் அரசியல் நடிகர்கள் அனைவரும் நடிகர் சங்க பொறுப்பில் இருப்பது குறித்துவிவாதிக்கப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் சரத்குமார் பேசுகையில்,

அரசியலில் இருப்பவர்கள் நடிகர் சங்கப் பொறுப்புகளில் இருப்பதில் தவறில்லை. அதை ஆட்சேபிக்கவேண்டியதில்லை என்று பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

எனவே அரசியலில் தீவிரமாக இருப்பவர்கள், நடிகர் சங்கத்திலும் பொறுப்புகளில் இருக்கலாம் என்று ஒருமனதாகதீர்மானிக்கப்பட்டது.

விஜயகாந்த் ஷூட்டிங்கிற்கு சென்று விட்டாலும் இங்கு எடுக்கப்படும் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாக அவர்அறிவித்துள்ளார் என்றார் சரத்குமார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil