twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டாப் ஹீரோயின் கூட தப்ப முடியாது... வாய்ப்புக்காக படுக்கையை பகிர வேண்டும்... அறிக்கையில் அதிர்ச்சி

    By
    |

    சென்னை: மலையாள சினிமாவில் பட வாய்ப்புக்காக, படுக்கையை பகிர வேண்டிய நிலை உள்ளதாக நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையை அடுத்து மலையாள முன்னணி நடிகரான திலீப் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீஸ் நடத்திய விசாரணையில் மலையாள சினிமாவில் நடிகைகள் பாலியல் தொல்லைகளுக்கு அதிகமாக ஆளாவது தெரியவந்தது.

    பெண்கள் அமைப்பு

    பெண்கள் அமைப்பு

    இதற்கிடையே, டபிள்யூ சி சி எனும் மலையாள சினிமா பெண்கள் திரைப்படக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. இதில் நடிகைகள் ரம்யா நம்பீசன், ரேவதி, பார்வதி, ரீமா கல்லிங்கல் உட்பட முன்னணி நடிகைகள் உறுப்பினர்களாக இருந்தனர்.

    விசாரணை கமிஷன்

    விசாரணை கமிஷன்

    இந்த அமைப்பினர் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, மலையாள சினிமாவில் நடிகைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆராய பெண் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    நீதிபதி ஹேமா

    நீதிபதி ஹேமா

    இதையடுத்து நீதிபதி ஹேமா தலைமையில் நடிகை சாரதா உட்பட 3 பேர் கொண்ட கமிஷனை, கேரள அரசு அமைத்தது. இந்த விசாரணை கமிஷன் மலையாள சினிமாவில், நடிகர், நடிகைகள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தியது. இந்நிலையில் விசாரணை அறிக்கையை நீதிபதி ஹேமா, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கொடுத்தார். அதில் அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    பல்வேறு கொடுமை

    பல்வேறு கொடுமை

    மலையாள சினிமாவில் நடிகைகள், பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    மறைமுகமாக தடை

    மறைமுகமாக தடை

    உடன்படாத நடிகைகளுக்கு மறைமுகமாகத் தடை விதிக்கப்படுகிறது. முன்னணி நடிகைகள் கூட இதில் இருந்து தப்பிக்க முடியவில்லை. சினிமாவில் மது, போதை மருந்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    கடுமையான சட்டம்

    கடுமையான சட்டம்

    கடுமையான சட்டத்தின் மூலமே இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க முடியும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. இந்த அறிக்கை மலையாள சினிமா உலகம் மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Hema Commission, appointed by the State government to study the problems faced by women in Malayalam cinema industry, has submitted its report now. The report flags major issues faced by women in the industry, including the practice of casting couch, a euphemism for demanding sexual favours in return for work opportunities.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X