Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஒரு ஸ்டெப் சரியா வரலை... என்னை ட்ரெயின் பண்ணி விடேன் ப்ளீஸ்... ஆர்யாவிடம் கெஞ்சிய சாந்தனு
சென்னை : சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் இரண்டாவது பாடலின் வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.
இந்த பாடலின் நடனம் சிறப்பாக உள்ளதாக அனைத்து தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
பில்லா
டு
ஜகமே
தந்திரம்..
போலீஸ்
படம்
மிஸ்
ஆனாலும்
ஆகும்
கேங்ஸ்டர்
படங்கள்
கன்ஃபார்ம்
ஹிட்டுதான்!
இந்நிலையில் சாந்தனுவை வம்பிழுக்கும் வகையில், நடிகர் ஆர்யா ட்வீட் ஒன்றை பதிவிட அதற்கு சாந்தனு சிறப்பான பதிலை அளித்துள்ளார்.

அதுல்யா ரவி ஹீரோயின்
சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் சாந்தனு. அவரது நடிப்பில் தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அவருடன் அதுல்யா ரவி, பாக்யராஜ், மனோபாலா, யோகிபாபு உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

குவியும் பாராட்டுக்கள்
இந்த படத்தின் முதல் பாடல் வீடியோ பாடலாக வெளியான நிலையில் இரண்டாவது பாடல் கடந்த வாரத்தில் லிரிக் வீடியோவாக வெளியானது. தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு இந்த பாடலின் வீடியோ வெளியானது. இதில் சாந்தனு மற்றும் அதுல்யா ரவியின் நடன அசைவுகள் சிறப்பான வகையில் படமாக்கப்பட்டுள்ளன.

மூவ்களை மறக்காத சாந்தனு
இந்த பாடலுக்கு ஏராளமானோர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் குறும்பாக ஒரு பதிவிட்டுள்ளார். பாடல் சிறப்பாக இருந்ததாகவும் தன்னுடைய மூவ்களை மறக்காமல் சாந்தனு ஆடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயிற்சி அளிக்க கோரிக்கை
இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள சாந்தனு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், நான்காவது ஸ்டெப் சரியாக வரவில்லை என்றும் தான் ஆர்யாவின் இடத்திற்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வருவதாகவும் அவர் தனக்கு சிறப்பாக பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆரோக்கியமான நட்பு
கோலிவுட்டில் இளம் தலைமுறை நடிகர்கள், ஒருவருக்கொருவர் எந்த ஈகோவும் இன்றி சிறப்பான நட்புடன் பழகி வருவது ஆரோக்கியமானது. மேலும் ஒருவரையொருவர் கலாய்த்துக் கொள்வதும் ரசிகர்களையும் சிறப்பாக என்டர்டெயின் செய்து வருகிறது. இதற்கு சமூக வலைதளங்களும் முக்கிய காரணமாக அமைந்து வருகிறது.