»   »  கல்விச் சேவையில் நடிகர் சங்கம்.. பிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் 2 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றது

கல்விச் சேவையில் நடிகர் சங்கம்.. பிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் 2 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் 2 மாணவர்களின் கல்விச்செலவை நடிகர் சங்கம் ஏற்றுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Actors association adopts 2 students education expenses

இந்நிலையில், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘மறைந்த திரைப்பட மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் இரண்டு மாணவர்களின் கல்விச்செலவை நடிகர் சங்கம் ஏற்றுக்கொண்டது' எனத் தெரிவித்தார்.

அதோடு, இந்த சந்திப்பின் போது, ‘எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட இருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடவிருக்கிறோம். நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவிற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை அழைக்கவிருக்கிறோம்''என்றார்.

English summary
Actor Vishal has said that the south Indian artist association has adopted the education expenses of two students as a tribute to veteran cinema journalist Filmnews Anandhan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil