»   »  நாசர் தலைமையில் முதல் நடிகர் சங்க செயற்குழுக் கூட்டம்.... சென்னையில் நடந்தது!

நாசர் தலைமையில் முதல் நடிகர் சங்க செயற்குழுக் கூட்டம்.... சென்னையில் நடந்தது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நாசர் தலைவராகப் பொறுப்பேற்றதற்குப் பின் முதன்முறையாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

பெரும் பரபரப்புகளுக்கிடையே கடந்த வாரம் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில், சரத்குமார் அணியை வீழ்த்தி விஷால் தலைமையிலான அணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத்திற்கு தலைவராக நாரும், பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Actors association's executive committee meeting held in Chennai

இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக அச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது தொடர்பாகவும், சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை எப்போது கூட்டடுவது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பான பிரச்சினையால் தான் முன்னாள் தலைவர் சரத்குமார் அணியினருக்கும், விஷால் அணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
After the election the first executive meeting of South Indian actors association held in Chennai today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil