»   »  ஏறுமுகத்தில் ஓ.பி.எஸ்.: நடிகர்கள் ராமராஜன், தியாகு, அருண்பாண்டியன் ஆதரவு

ஏறுமுகத்தில் ஓ.பி.எஸ்.: நடிகர்கள் ராமராஜன், தியாகு, அருண்பாண்டியன் ஆதரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர்கள் ராமராஜன், அருண்பாண்டியன் மற்றும் தியாகு ஆகியோர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பை பெற்ற நடிகர் ராமராஜன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் தியாகுவும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ராமராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஓ.பி.எஸ்.

ஓ.பி.எஸ்.

ஓ.பி.எஸ். என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?. ஓயாமல் பொறுப்பாக செயல்படுபவர் என்பது தான் அர்த்தம். பன்னீர்செல்வத்தின் ஆட்சியில் குறை ஒன்றும் இல்லை.

அம்மா

அம்மா

அம்மாவால் அடையாளம் காணப்பட்டவர் ஓ.பி.எஸ். அப்படிப்பட்டவர் தான் நம் முதல்வராக இருக்க வேண்டும். அம்மாவின் மறைவுக்கு பிறகு எது நடக்கக் கூடாது என்று பயந்தோமோ அது நடந்துவிட்டது.

தலைவர்

தலைவர்

ஓ. பன்னீர்செலவம் தான் தற்போது நம்முடைய தலைவர். அவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழி நடப்பவர் என்று நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.

தியாகு

தியாகு

ஓ. பன்னீர்செல்வம் தான் நிஜ கதாநாயகன் என நடிகர் தியாகு கூறியுள்ளார். ராமராஜன், தியாகு தவிர்த்து நடிகர் அருண்பாண்டியனும் முதல்வரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

English summary
Actors Ramarajan, Thiyagu and Arun Pandian have met CM O. Panneerselvam at his residence in Chennai on sunday and extended their support.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil