»   »  அதே விலைக்கு விற்கப்படும்.. நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்கவேண்டும்! - தியேட்டர் உரிமையாளர்கள் பதிலடி

அதே விலைக்கு விற்கப்படும்.. நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்கவேண்டும்! - தியேட்டர் உரிமையாளர்கள் பதிலடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கேளிக்கை வரி தொடர்பாக தமிழ்த் திரையுலகினர் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கூட்டத்தின் முடிவில் 2% கேளிக்கை வரியை குறைக்க அரசு சம்மதம் தெரிவித்தது.

திரையுலகினரும் அதை ஏற்று கொண்டனர். இனி அரசு நிர்ணயித்த தியேட்டர் கட்டணத்துடன் 28% ஜிஎஸ்டி மற்றும் 8% கேளிக்கை வரி விதிக்கப்பட்டு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.

Actors should reduce their salary - Abirami Ramanathan retaliated

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தியேட்டர்களில் கட்டணக் கொள்ளையைத் தடுக்கவேண்டும் என ஒரு அறிக்கை வெளியிட்டார். ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டிலை எம்.ஆர்.பி விலைக்கே விற்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அபிராமி ராமநாதன் உள்ளிட்ட தியேட்டர் உரிமையாளர்கள், 'இனி அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே சினிமா டிக்கெட் விற்கப்படும். எப்படிப்பட்ட பெரிய நடிகரின் படம் என்றாலும் ஒரு ரூபாய் கூட அதிகம் வசூலிக்கப்படாது' எனத் தெரிவித்தனர்.

தின்பண்டங்ளும் எம்.ஆர்.பி விலைக்கே விற்கப்படும். பார்க்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம் உள்ளிட்டவைகள் குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் நாளை சந்தித்து ஆலோசனை நடத்தி ஒரு நல்ல முடிவு எடுப்போம்.

தியேட்டர்களில் அம்மா குடிநீர் விற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர்களின் சம்பளத்தையும், தயாரிப்புச் செலவையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

English summary
After the negotiations with the Government, theater owners association president Abirami Ramanathan interviewed in Chennai. 'The water bottle is sold to the MRP price. At the same time, actors should reduce their salary.' he demanded.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil