Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு தேர்தல்: 'ஜீரோ பிளஸ் ஜீரோ' ஜீரோ தான்.. காங்கிரசுடன் கமல் கூட்டணி குறித்து எச் ராஜா
- Finance
ஏர் இந்தியா ஒரு வருட வெற்றி.. 500 புதிய விமானம்.. மாபெரும் அறிவிப்பு.. இனி தொடர் ஏறுமுகம் தான்..!
- Lifestyle
உங்க ராசிப்படி காதலில் நீங்க செய்யப்போகும் மோசமான தவறு என்ன தெரியுமா? தெரியாமகூட இத பண்ணாதீங்க!
- Technology
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சிம்பு, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!
சென்னை : நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள மாநாடு திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
ஹன்சிகா மற்றும் சிம்பு இருவரும் இணைந்து வாலு என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இப்போது மஹா என்ற படத்திலும் நடித்து உள்ளனர்.
இந்த நிலையில் இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹன்சிகா மற்றும் சிம்பு இணைந்து ஜோடியாக நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
சிம்பு சூப்பர்… எஸ்ஜே சூர்யா தெறிச்சிட்டாரு… சிவா பாராட்ட பாருங்க!

ஈஸ்வரன்
சில பிரச்சனைகளால் திரைப்படங்களில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் இருந்த நடிகர் சிம்பு இப்போது முழுவீச்சில் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இதுவரை ஒப்பந்தமாகி இருந்த ஒவ்வொரு படங்களிலும் நடித்து முடித்து வருகிறார்

அரசியல் கலந்த சயின்ஸ் பிக்சன்
வெங்கட் பிரபு மற்றும் சிம்பு கூட்டணியில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு பல்வேறு பிரச்சனைகளால் படப்பிடிப்பு சரியாக நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் அனைத்து பிரச்சனைகளும் ஒருவழியாக முடிந்து சமரசத்திற்கு இருவரும் வந்து படப்பிடிப்பு மொத்தமும் முடிக்கப்பட்டு இப்போது ரிலீஸாகியுள்ளது. அரசியல் கலந்த சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக வெளியான மாநாடு இப்பொழுது ரசிகர்களின் பாராட்டை பெற்று வெற்றி நடைபோடுகிறது

ஹன்சிகாவுடன் இணைந்து
வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்த படங்களில் சிம்பு மும்முரமாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹன்சிகாவுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருவரும் ஏற்கனவே வாலு என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து இருந்தனர். அந்த படத்திற்கு பிறகு இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஓரிரு மாதங்களிலேயே இருவரும் காதலை முறித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

மீண்டும் இணையும் ஹன்சிகா சிம்பு
இந்த நிலையில் நீண்ட ஆண்டுகளாக ஹன்சிகா மற்றும் சிம்பு இருவரும் இணைந்து நடிக்காமல் இருந்தனர். இப்பொழுது ஹன்சிகாவின் 50-வது திரைப்படமான மஹாவில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மஹா இன்னும் ஓரிரு மாதங்களில் ரிலீஸாக இருக்க ஹன்சிகா மற்றும் சிம்பு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் குடும்ப கதை களத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் நந்தா பெரியசாமி இப்பொழுது ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தை இயக்கியுள்ளார்.