»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர், நடிகைகள் உட்பட சினிமாக் கலைஞர்கள் யாரும் இன்று முதல் "டிவி" நிகழ்ச்சிகளுக்கு பேட்டி தரக்கூடாதுஎன்று தமிழ் திரையுலகக் கூட்டுக்குழு அறிவித்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இப்ராஹிம் ராவுத்தர், நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், பெப்சி தலைவர் கே.பாலசந்தர், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் எல். சுரேஷ், திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர்அண்ணாமலை ஆகியோர் சென்னையில் செவ்வாய்க்கிழமை ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். அந்தஅறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

திரைப்படப்பாடல் காட்சிகள் ஒன்றரை நிமிடங்களுக்கு மேலும், படங்களின் டிரையிலெர்கள் 3 நிமிடங்களுக்குமேலும் டிவியில் ஒளிபரப்ப எந்தத் தயாரிப்பாளரும் கொடுக்கக் கூடாது.

படத்துவக்கவிழா, பட வெற்றிவிழா, கேசட் வெற்றிவிழா ஆகியவற்றை டிவி சேனல்கள் ஒளிபரப்பலாம். ஆனால்படப்பிடிப்புகளில் டிவி செய்தியாளர்களை எந்தத் தயாரிப்பாளரும் அனுமதிக்கக் கூடாது.

நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொழில்நுட்பவல்லுநர்கள் ஆகியோர் எவரும் டிவி சேனல்களுக்குப் பேட்டி தரக் கூடாது. இந்த முடிவுகளை மீறுபவர்களுக்குகூட்டுக் குழுவின் எந்த ஒத்துழைப்பும் கிடைக்காது.

இந்த முடிவுகள் இன்று (புதன்கிழமை, நவம்பர் 7) முதல் அமல்படுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil