»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டாக்டர் பட்டம் பெற்றதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த்வாழ்த்து சொல்லப் போக, அது சில நடிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.

ஜெயலலிதாவுக்கு சமீபத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம்வழங்கியது. இதையடுத்து நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திஅனுப்பினார்.

அதில், தமிழக நடிகர் சங்கம் சார்பிலும், அனைத்து நடிகர், நடிகையரின் சார்பிலும் வாழ்த்துத்தெரிவிப்பதாக அவர் தெரிவித்திதருந்தார்.

இது சில நடிகர்களிடையே, குறிப்பாக திமுக நடிகர்களிடையே பெரும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளதாம். இவர் மட்டும் வாழ்த்துவதாக கூறி விட்டு போகட்டுமே. அனைத்து நடிகர்கள்சார்பில் என்று இவர் எப்படிக் கூறலாம் என்று திமுகவைச் சேர்ந்த நடிகர்கள் சரத்குமார்,நெப்போலியன், சந்திரசேகர் போன்றவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

அம்மா தன்னை இப்போது கண்டுகொள்வதில்லை என்ற கவலையில் இருக்கும் கேப்டன், இந்தவாழ்த்தின் மூலமாவது அம்மாவின் கருணை கிடைக்காதா என்ற நப்பாசையில் வாழ்த்துத்தெரிவித்தார். அது புரியாமல் கேப்டனை விமர்சிக்கிறார்களே என்று சில நடிகர்கள் நமுட்டுச்சிரிப்பு சிரிக்கிறார்களாம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil