»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுனாமி நிவாரண நிதி திரட்டுவதற்காக நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளும் மாரதான் ஓட்டம் வரும் 20ம் தேதிசென்னையில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சித் துறை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து இந்த ஓட்டத்திற்கு ஏற்பாடுசெய்துள்ளன.

இதில் தமிழ் திரையுலக நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொள்கின்றனர். தற்போதைக்கு பிரபு, சிம்பு, டிவி நடிகர்விஜய் ஆதிராஜ், ரமேஷ் கண்ணா, அஜய் ரத்தினம், ரிச்சர்ட், எஸ்.ஜே. சூர்யா, குஷ்பு, மாளவிகா, ஸ்ரீதேவி, ரஞ்சிதா,அர்ச்சனா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவாதக பதிவு செய்துள்ளனர்.

விஜய், அஜீத், கமல்ஹாசன், விஜயகாந்த், ரஜினி காந்த் போன்ற பெரிய நிடிகர்கள் இதில் கலந்து கொள்வார்களாஎன்பது குறித்துத் தெரியவில்லை.

2,000க்கும் மேற்பட்டோர் இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil