»   »  மெம்பர்ஷிப்: நடிகைகளுக்கு ஆப்பு!

மெம்பர்ஷிப்: நடிகைகளுக்கு ஆப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாமல் இருக்கும் நடிகர், நடிகைகளை கைகழுவ, அவர்களுக்கு எந்தவித உதவியும் செய்யாமல் இருக்க நடிகர் சங்கம் தீர்மானித்துள்ளதாம்.

சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கிட்டத்தட்ட 3500 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 700 பேர் ஆயுட்கால உறுப்பினர்கள். அவர்களிடம் ரூ. 2000 வரை உறுப்பினர் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவுக்கு புதிதாக வந்த நடிகர், நடிகைள் பலர் இதுவரை உறுப்பினர்களாக ஆமாலேயே காலத்தைத் தள்ளி வருகின்றனர். நவ்யா நாயர், ஜெனீலியா, ஷ்ரியா, கிரண், தமன்னா, சிந்து துலானி ஆகியோர் உறுப்பினர் ஆகாமல் காலம் தள்ளி வரும் நடிகைககளில் சிலர். ஜீவனும் இதுவரை மெம்பர்ஷிப் போடவில்லையாம்.

அதேசமயம், மீரா ஜாஸ்மின், நிலா, சரண்யா, சாந்தனு, விஷால், நரேன், கீர்த்தி சாவ்லா, கார்த்தி, சிபிராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

உறுப்பினர் ஆகாத நிலையிலும் கூட தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், நடிகர் சங்க நிர்வாகிகளை அணுகி பஞ்சாயத்து வைத்து பலன் அடைந்து வருகின்றனராம் நவ்யா நாயர் உள்ளிட்ட நடிகைகள்.

தங்கர்பச்சான் படத்தில் நவ்யா நாயர் நடித்தபோது பிரச்சினை ஏற்பட்டது. இதற்காக நடிகர் சங்கமே திரண்டு, தங்கர்பச்சானுக்கு எதிராக களம் இறங்கியது. குஷ்புவோ வானத்துக்கும், பூமிக்குமாக துள்ளிக் குதித்தார். இத்தனைக்கும் நவ்யா நாயர் இதுவரை நடிகர் சங்கத்தில் உறுப்பினராகக் கூட இல்லை.

பல லட்சம் ரூபாய் சம்பளத்தை வாங்கிக் கொண்டு சங்க உறுப்பினராகாமல், சங்கத்திற்காக கொஞ்சம் கூட செலவழிக்க முன்வராத நடிகர், நடிகைகளுக்கு ஆப்பு வைக்க சங்கம் முடிவு செய்துள்ளதாம்.

இனிமேல் உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பது, ஒத்துழைப்பது, பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது, மற்றவர்களை கண்டுகொள்ளாமல் கைவிடுவது என இப்போது நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாம்.

இதைப் பார்த்தாவது உறுப்பினர் ஆகாமல் உள்ள நடிகர், நடிகைகள் சங்கத்தில் உறுப்பினராவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil