»   »  மெம்பர்ஷிப்புக்கு விரையும் நடிகைகள்

மெம்பர்ஷிப்புக்கு விரையும் நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத நடிகர், நடிகைகளுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் ராம. நாராயணன் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இதுவரை உறுப்பினராகாத பல நடிகர், நடிகைகள் மெம்பர்ஷிப் கோரி நடிகர் சங்கத்திற்குப் படையெடுத்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் புதுவித பிரச்சினை எழுந்துள்ளது. நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏதாவது எழுந்தால் உடனடியாக நடிகர் சங்கம் தலையிட்டு பிரச்சினையத் தீர்த்து வைக்கும்.

அதேசமயம், உறுப்பினர்களாக இல்லாத நடிகர், நடிகைகளுக்கும் சம்பள பிரச்சனை முதல் அனைத்து பிரச்சனைகளிலும் நடிகர் சங்கம் தலையீட்டு தீர்த்து வைத்துவைக்கும்.

உறுப்பினராக இல்லாத நடிகர், நடிகைகள் தங்களுக்குப் பிரச்சினை வந்தால் சங்கத்தை அணுகுகிறார்கள். ஆனால் சங்கத்துக்கு எந்தவித நிதியுதவியும் செய்வதில்லை, சங்கத்தைக் கண்டுகொள்வதும் இல்லை.

இதையடுத்து நடிகர் சங்கம் புது திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன் படி, சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத நடிகர், நடிகைகளுக்கு எந்த உதவியும் செய்வதில்லை, அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை, அவர்களது பிரச்சினைகளுக்குப் பஞ்சாயத்து பேசுவதில்லை என தீர்மானித்துள்ளது.

நடிகர் சங்கத்தின் முடிவை தயாரிப்பாளர் கவுன்சிலும் ஆமோதித்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கூறுகையில்,

நடிகர், நடிகைகள் உறுப்பினர் கட்டணமாக தரும் தொகை மூத்த மற்றும் நலிவுற்ற கலைஞர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே அனைத்து நடிகர், நடிகைகளும் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

உறுப்பினர் அல்லாதவர்களுக்கு பல பிரச்சனைகளில் இதுவரை இரு சங்கங்களும் தலையீட்டு தீர்வு கண்டு வந்தன. இனி உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு தருவதென முடிவு செய்துள்ளோம் என்றார்.

ராம. நாராயணனின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இதுவரை உறுப்பினராகமல் ஓசியில் பலனை அனுபவித்து வரும் பல நடிகர், நடிகைகள் அடித்துப் பிடித்துக் கொண்டு நடிகர் சங்கத்திற்கு ஓடி வர ஆரம்பித்துள்ளனர்.

உறுப்பினர் விண்ணப்பங்களை வாங்கி எப்படி உறுப்பினராவது என்று கேட்டு உறுப்பினராகி வருகின்றனராம்.

முன்னணி நடிகைகளான நவ்யா நாயர், ஷ்ரியா, ஜோதிர்மயி, ஜெனீலியா, தமன்னா, கிரண், சிந்து துலானி, நடிகர் ஜீவன் உள்ளிட்டோர் இதுவரை உறுப்பினர்களாகாமல் உள்ள முன்னணிக் கலைஞர்கள் ஆவர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil