»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

தமிழ் திரையுலகின் முதல் கவர்ச்சி நடிகை தவமணி தேவி சனிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 76.

தமிழ்த் திரையுலகில் முதல்முதலாக கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் தவமணிதேவி. பல படங்களில் கவர்ச்சியாக நடித்தவர்.

இலங்கையில் பிறந்த தவமணிதேவி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தனது 15 வது வயதில் மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தால் திரையுலகில்அறிமுகமானார். சதி அகல்யா என்ற படத்தில் அறிமுகமான இவர் ராஜகுமாரி படம் வரை கவர்ச்சியாக நடித்து அந்தக் கால இளைஞர்களின் உள்ளத்தைக்கொள்ளை கொண்டவர்.

1962 ல் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கோடிலிங்க சங்கர சாஸ்திரியை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். பின்பு அங்கேயே வசித்து வந்தார். சினிமாவைவிட்டு விலகி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சமீபகாலமாக உடல் நலம் இன்றி சிகிச்சை பெற்று வந்த இவர் சனிக்கிழமைகாலமானார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil