»   »  நடிகை கடத்தல்: நடிகர் திலீப்பிடம் மதியம் 12 மணியில் இருந்து இரவு 1 மணிவரை விசாரணை

நடிகை கடத்தல்: நடிகர் திலீப்பிடம் மதியம் 12 மணியில் இருந்து இரவு 1 மணிவரை விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்பிடம் கேரளா போலீசார் தொடர்ந்து 13 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். அவரை மலையாள நடிகர் திலீப் தான் ஆள் வைத்து அசிங்கப்படுத்தியதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Actress abduction case: Dileep quizzed for 13 hours

நடிகையின் விஷயத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று திலீப் கூறியும் யாரும் அவரை நம்ப தயாராக இல்லை. இந்நிலையில் அவர் நடிகை விவகாரத்தில் உண்மையை கண்டுபிடித்து கூறுமாறு அலுவா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து அவர் அளித்த புகார் தொடர்பாக விசாரிக்க போலீசார் திலீப்பை காவல் நிலையத்திற்கு அழைத்தனர். நேற்று நண்பகல் 12 மணிக்கு காவல் நிலையத்திற்குள் சென்ற திலீப் இரவு 1.10 மணிக்கு தான் வெளியே வந்தார்.

போலீசார் அவரிடம் 13 மணிநேரமாக விசாரித்துள்ளனர். விசாரணைக்கு பிறகு தனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக திலீப் கூறியுள்ளார்.

English summary
Aluva police have quizzed Malayalam actor Dileep for 13 long hours in connection with a popular actress abduction case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil