»   »  நடிகை கடத்தல் வழக்கில் திலீப்பின் நெருங்கிய தோழியிடம் விசாரணையா?

நடிகை கடத்தல் வழக்கில் திலீப்பின் நெருங்கிய தோழியிடம் விசாரணையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பிரபல நடிகை கடத்தப்பட்ட வழக்கில் போலீசார் தன்னிடம் விசாரணை நடத்தினார்களா என்பதற்கு பதில் அளித்துள்ளார் மலையாள நடிகை மைதிலி.

மலையாள நடிகர் திலீப்புடன் சேர்ந்து படங்களில் நடித்துள்ளவர் மைதிலி. திலீப்பின் நெருங்கிய தோழி என்று மலையாள திரையுலகில் தெரிவித்துள்ளனர்.

Actress Abduction case: Mythili rubbishes the rumour

இந்நிலையில் தான் மைதிலி பற்றி ஒரு செய்தி தீயாக பரவியது. பிரபல மலையாள நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் போலீசார் திலீப்பிடம் 13 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

நடிகை கடத்தல் வழக்கில் மைதிலிக்கும் தொடர்பு உள்ளது என்றும், இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

Actress Abduction case: Mythili rubbishes the rumour
Malayalam Actress abduction case, Kavya Madhavan is in trap-Filmibeat Tamil

மேலும் சில மலையாள ஊடகங்களும் இது குறித்த செய்திகளை வெளியிட்டன. இதை பார்த்த மைதிலி டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், நடிகை கடத்தலுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், போலீசார் தன்னிடம் விசாரணை நடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Mythili has rubbished the rumours about her connection with the popular actress abduction case.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil