»   »  நடிகை மானபங்க வழக்கு: குற்றவாளிக்கு ஆர்டர் போட்ட அந்த 'மேடம்' யார் தெரியுமா?

நடிகை மானபங்க வழக்கு: குற்றவாளிக்கு ஆர்டர் போட்ட அந்த 'மேடம்' யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: நடிகையை கடத்தி மானபங்கப்படுத்திய வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி தனக்கு உத்தரவுகள் இட்டு வந்த மேடம் யார் என்பதை தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகையை காரில் கடத்தி மானபங்கப்படுத்திய வழக்கின் முக்கிய குற்றவாளி பல்சர் சுனி. இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நடிகை விவகாரம் தொடர்பாக தனக்கு ஒரு மேடம் உத்தரவிட்டு வந்ததாக பல்சர் சுனி தெரிவித்தார்.

மேடம்

மேடம்

கொச்சி நீதிமன்றத்திற்கு நேற்று பல்சர் சுனி அழைத்து வரப்பட்டார். அப்போது அவரை பார்த்த பத்திரிகையாளர்களோ, அந்த மேடம் யார் என்று மீண்டும் மீண்டும் கேட்டனர்.

காவ்யா மாதவன்

காவ்யா மாதவன்

தனக்கு உத்தரவிட்டு வந்த மேடம் யார் என்பதை இத்தனை நாட்களாக பல்சர் சுனி தெரிவிக்கவில்லை. இந்நிலையில் என் மேடம் நடிகை காவ்யா மாதவன் தான் என்று நேற்று அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

சிக்கல்

சிக்கல்

நடிகை மானபங்க வழக்கில் போலீசார் ஏற்கனவே காவ்யா மாதவனிடம் மணிக்கணக்கில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் பல்சர் சுனியின் பதிலால் காவ்யாவுக்கு சிக்கில் ஏற்பட்டுள்ளது.

துபாய்

துபாய்

நடிகை வழக்கில் போலீஸ் விசாரணையாக இருப்பதால் துபாயில் செட்டிலாக காவ்யா மாதவன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்சர் சுனி காவ்யாவின் கடைக்கு இரண்டு முறை வந்ததற்கான சிசிடிவி ஆதாரமும் போலீசாரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திலீப்

திலீப்

திலீப் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரும் ஜாமீன் கேட்டு தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறார். நீதிமன்றமும் அவரது மனுக்களை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

English summary
Pulsar Suni, the prime accused in actress abduction case siad that the madam who gave orders to him is none other than actress Kavya Madhavan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil