»   »  ‘துடி’ப்பான ஹோட்டல் ரிசப்சனிஸ்ட் ஆன அபிநயா

‘துடி’ப்பான ஹோட்டல் ரிசப்சனிஸ்ட் ஆன அபிநயா

Posted By:
Subscribe to Oneindia Tamil

துடி என்ற க்ரைம் திரில்லர் படத்தில் நடிகை அபிநயா ஹோட்டல் ரிசப்சனிஸ்ட் ஆக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘நாடோடிகள்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது.

நாடோடிகளைத் தொடர்ந்து ‘ஈசன்', ‘7-ம் அறிவு', ‘வீரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

துடிப்பான ரிசப்சனிஸ்ட்

துடிப்பான ரிசப்சனிஸ்ட்

இவர் தற்போது தமிழில் நடித்து வரும் படம் ‘துடி'. இதில் இவர் ஹோட்டல் ரிசப்சனிஸ்ட்டாக நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை ரிதுன் சாகர் இயக்கி வருகிறார்.

நளினி

நளினி

அபிநயாவுடன் இப்படத்தில் சுமன், பிரமானந்தம், சூது கவ்வும் ரமேஷ், நளினி, மற்றும் இன்னொரு நாயகியாக பிரேர்னா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்கிறார்.

கதை என்ன?

கதை என்ன?

ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்தான் இப்படத்தின் கதை. மாலை 6 மணிக்கு துவங்கி காலை 6 மணிக்குள் நடக்கும் சம்பவங்கள் திரைக்கதையாக அமைத்திருக்கிறார்களாம். அந்த காலகட்டத்தில் உருவான முக்கிய சம்பவம்தான் கதையின் மையக்கரு என்கின்றனர்.

நட்சத்திர ஹோட்டல் அரங்கம்

நட்சத்திர ஹோட்டல் அரங்கம்

இப்படத்திற்காக சென்னையில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலின் இண்டீரியர் அரங்குகளாக அமைக்கப்பட உள்ளது. சென்னை, ஹைதராபாத், மூணார் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

துடிப்பான துடி

துடிப்பான துடி

புதுமையான முறையில் உருவாகும் ‘துடி' படத்திற்கு நடாஷா ஆதித்யா இசையமைக்கிறார். மைன்டிராமா என்ற பட நிறுவனம் சார்பாக ரிதுன் சாகர், ஜி.லஷ்மி இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

English summary
Actress Abhinaya, Nalini, Suman, Ramesh Thilak starring Thudi Tamil Movie. Abinaya plays hotel receptionist role in Thudi movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil