»   »  சோனியா வேடத்தில் நடிக்க இந்தியாவில் ஆளே இல்லையா.. அங்கிருந்து வரும் நடிகை!

சோனியா வேடத்தில் நடிக்க இந்தியாவில் ஆளே இல்லையா.. அங்கிருந்து வரும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : இந்திய திரையுலகம் சமீபகாலமாக வி.ஐ.பி-களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்க்கை வரலாறு திரைப்படமும் உருவாகவுள்ளது. 'தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தில் சோனியா காந்தியின் கேரக்டரும் முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Actress to act in Sonia gandhi role in manmohan singh biopic

இந்தப் படத்தில் சோனியா காந்தி கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சூசன் பெர்னெர்ட் என்ற ஜெர்மனி நடிகை சோனியா காந்தியாக நடிக்கவிருக்கிறார். இவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்றாலும் அகில் மிஷ்ரா என்ற இந்திய நடிகரைத் திருமணம் செய்து கொண்டவர்.

நடிகை சூசன் பெர்னெர்ட் ஏற்கனவே பல இந்தியப் படங்களிலும், பல்வேறு மொழி டி.வி நிகழ்ச்சிகளிலும் நடித்திருக்கிறார். மன்மோகன் சிங்கின் இந்த பயோபிக் படம் வெளிவந்தால் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Former PM Manmohan Singh's biopic titled 'The Accidental Prime Minister'. Sonia Gandhi's character in this film is of importance. Germany actress Suzanne Bernert is to act as Sonia Gandhi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X