»   »  ப்ளூ வேல் விபரீதம்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்ப நண்பர் தற்கொலை

ப்ளூ வேல் விபரீதம்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்ப நண்பர் தற்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்ப நண்பர் ஒருவர் ப்ளூ வேல் விளையாட்டால் தற்கொலை செய்துள்ளார்.

ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டால் இளம் தலைமுறையினர் தற்கொலை செய்யும் அவலம் நடந்து வருகிறது. இந்த வாரம் தான் சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் ப்ளூ வேல் விளையாட்டால் மாடியில் இருந்து குதித்தார்.

Actress Aishwarya Rajesh's family friend commits suicide because of Blue Whale game

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பியின் நண்பர் ப்ளூ வேல் விளையாட்டுக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட நபருக்கு 23 வயது தான் ஆகிறது.

ஸ்மார்ட் போன்களும், சமூக வலைதளங்களும் இல்லாமல் இளைஞர்களால் இருக்க முடியவில்லை. இந்நிலையில் இந்த ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டால் இளம் தலைமுறை தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடந்து வருகிறது.

கேரளாவில் ப்ளூ வேல் விளையாட்டுக்கு அடிமையாகி இருவர் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Aishwarya Rajesh's family friend has committed suicide because of Blue Whale game.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil