Don't Miss!
- News
நாலாக உடைந்த அதிமுக.. ஜால்ரா.. பாஜக போட்டியிட்டாலும் வரவேற்போம்..சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
- Finance
இந்தியாவுக்குக் கிளம்பும் நேரம் வந்தாச்சு.. NRI டெக் ஊழியர்கள் கண்ணீர்..!
- Lifestyle
சப்பாத்தி, பூரிக்கு சூப்பராக இருக்கும்... ஆலு பட்டர் மசாலா
- Sports
ஒரே போட்டியில் பல மாற்றங்கள்.. நியூசி, உடனான 3வது ODI போட்டி..ப்ளேயிங் 11ல் ரோகித் சர்மா பலே திட்டம்
- Technology
விபூதி அடிக்கும் BharOS என்கிற "பாரத்" ஓஎஸ்? இந்த உண்மை தெரிஞ்சா.. கழுவி கழுவி ஊத்துவீங்க!
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
அஜித்துடன் மீண்டும் இணையும் உலக அழகி.. நட்சத்திர பட்டாளம் சூப்பரா இருக்கே!
சென்னை : நடிகர் அஜித் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது துணிவு படம்.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அதிகப்படியான வரவேற்பை கொடுத்துள்ள நிலையில், படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே தனது அடுத்தப்படத்தின் வேலைகளில் தற்போது அஜித் பிசியாகியுள்ளார். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thunivu Box office worldwide: அசராத அஜித்... பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை நெருங்கிய துணிவு

நடிகர் அஜித்
நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூருடன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார் அஜித்.

வாரிசு படத்துடன் மோதிய துணிவு
தீபாவளி ரிலீசுக்கே திட்டமிடப்பட்ட துணிவு படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகியுள்ளது. மேலும் விஜய்யின் வாரிசு படத்துடன் துணிவு படம் தற்போது மோதியுள்ளது. பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு துணிவு படம் உருவாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சிறப்பாக நடித்த மஞ்சு வாரியர்
இந்தப் படத்தில் டான்ஸ், பைட் என ரசிகர்களை கவரும்வகையில் சிறப்பை கொடுத்துள்ளார் அஜித். படத்தில் அவருடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்களுடன் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளனர். குறிப்பாக மஞ்சு வாரியர் கிளைமாக்ஸ் காட்சிகளில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அஜித்தின் ஏகே62 படம்
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏகே62 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் நடிகர் அஜித். இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. லைகா தயாரிக்கவுள்ள இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் பிரபல இசையமைப்பாளர் அனிருத்.

அஜித்துடன் இணையும் ஐஸ்வர்யா ராய்
இந்தப் படத்தின் நாயகி யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்னும் மேற்கொள்ளாமல் உள்ளார் விக்னேஷ் சிவன். முதலில் நயன்தாரா படத்தின் நாயகி என்று கூறப்பட்ட நிலையில், அடுத்ததாக லிஸ்டில் த்ரிஷா இருந்தார். இந்நிலையில் தற்போது உலக அழகி ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிப்பு
நடிகர் அஜித்துடன் ஏற்கனவே கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நிலையில், தற்போது ஏகே62 படத்தில் 23 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக இருவரும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.