Don't Miss!
- Finance
கோபர்தன் திட்டம் ஏன் முக்கியம்.. விவசாயம், கிரமங்களுக்கு
- News
எகிறும் பிரஷர்.. பாஜகவால் ஈரோடு கிழக்கு தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியில் குழப்பம்.. அடுத்து என்ன?
- Lifestyle
உங்களுக்கு 'அந்த' இடத்தில் இரத்தம் வந்தால்... இந்த ஆபத்தான நோய் இருக்கலாமாம்... உடனே டாக்டரை பாருங்க!
- Automobiles
முன்ன மாதிரியில்ல ஹோண்டா வாகனங்கள் மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்... கிடுகிடுவென சரியும் விற்பனை!
- Sports
ஹர்திக் கொடுத்த பலே ஐடியா.. சதத்திற்கு நீங்க தான் காரணம்.. ஹர்திக் குறித்து சுப்மன் கில் பேச்சு
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தடுத்த படங்கள்.. 4 படங்கள் ரிலீசுக்கு ரெடி!
சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கிராமத்து கதைக்களங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
இவரது நடிப்பில் வெளியான காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அசத்தியவர்.
தொடர்ந்து கதைக்களங்களுக்கு தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
ஹாட்ரிக்
கொடுத்த
வெற்றிக்
கூட்டணி..
தளபதி
68
படத்தை
இவர்தான்
இயக்கப்போறாரா..
விரைவில்
அறிவிப்பு!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து தன்னுடைய கேரக்டருக்கும் கதைக்களங்களுக்கும் முக்கியத்தும் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தன்னுடைய கேரக்டரின் துவக்கத்திலிருந்தே சிறிய கேரக்டராக இருந்தாலும் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் உடனே ஓகே சொல்லி நடித்து வருகிறார்.

காக்கா முட்டை படம்
அந்த வகையில் தன்னுடைய கேரியரின் ஆரம்ப காலகட்டத்திலேயே காக்கா முட்டை என்ற படத்தில் இரண்டு குழந்தைகளின் அம்மாவாக ஏழைப் பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்தப் படங்களை தொடர்ந்து சில படங்களில் இவர் நகரத்து பெண்ணாக நடித்தாலும் அந்தப் படங்கள் ரசிகர்களை அதிகமாக கவரவில்லை.

அதிகமான படங்கள்
இதனிடையே கோலிவுட்டில் அதிகமான படங்களில் நடித்துவரும் நடிகை என்ற பெருமையும் இவருக்கு உள்ளது. படங்களில் மட்டுமில்லாமல் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சூழல் வெப் தொடர் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

அடுத்தடுத்த படங்கள்
இதனிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. மலையாளத்தில் வெளியாகி வெற்றிப்படமாக மாறிய தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தின் தமிழ் ரீமேக், விஷ்ணு விஷாலுடன் மோகன்தாஸ், கின்ஸ்லின் இயக்கத்தில் டிரைவர் ஜமுனா உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.

சொப்பன சுந்தரி படம்
இதேபோல அர்ஜூனுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தீயவர் குலைகள் நடுங்க படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. இதனிடையே, இவரின் சொப்பன சுந்தரி படத்தின் சூட்டிங்கும் முற்றிலும் நிறைவடைந்து விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு பிறகு ரிலீஸ்
தீபாவளியை அடுத்து ஐஸ்வர்யாவின் அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய திறமையால் அதிகமான ரசிகர்களை பெற்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், மேலும் கைவசம் அதிகமான படங்களை வைத்துள்ளார். தொடர்ந்து அந்தப் படங்களில் நடித்தும் வருகிறார்.