»   »  கயிற்றில் தொங்கிய சண்டைக்காட்சியில் தவறி விழுந்து நடிகை காயம்.. ஷூட்டிங் ரத்து!

கயிற்றில் தொங்கிய சண்டைக்காட்சியில் தவறி விழுந்து நடிகை காயம்.. ஷூட்டிங் ரத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தவறி விழுந்து நடிகை காயம்..ஷூட்டிங் ரத்து!- வீடியோ

மும்பை : பிரபல பாலிவுட் இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கி வரும் பிரமாண்ட சூப்பர் நேச்சுரல் படம் 'பிரமாஸ்திரா'. ஆலியா பட், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ இப்படத்தைத் தயாரிக்கிறது.

'பிரமாஸ்திரா' படத்தின் ஷூட்டிங் தற்போது பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் ஆலியா பட் நடிக்கும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. உயரமான கட்டிடத்தின் மீது நின்றுகொண்டு பல்கேரிய சண்டைக் கலைஞர்களுடன் மோதினார் ஆலியா பட்.

Actress Alia bhatt injured in shooting

பாதுகாப்பிற்காக ஆலியா பட் ரோப் கட்டியிருந்தார். படத்திற்காக சண்டை போடும்போது ஆலியா பட் தவறி விழுந்தார். அப்போது ரோப்பின் நீளத்தில் சற்று வித்தியாசம் இருந்தால் தரையில் விழுந்துள்ளார். இதில் அவருக்கு தோள் மற்றும் கை ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிக்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆலியா பட் 15 நாள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து 'பிரமாஸ்திரா' படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆலியா பட் மும்பை திரும்புவார் எனக் கூறப்படுகிறது. ஆலியா பட் ரசிகர்கள் இந்தச் செய்தியால் கவலையடைந்துள்ளனர்.

English summary
Bollywood actress Alia bhatt injured on 'Brahmatra' set in Bulgaria. In this she suffered a serious injury in her shoulder and hand.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X