வாழ்க்கையை மாற்றிய அப்பாவின் மரணம்.. தனிமையில் வாழும் நடிகை அம்முவின் மறுபக்கம்!

சென்னை: நடிகை அம்மு ராமச்சந்திரன் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசி இருந்தார். இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலான நிலைகள் பலரும் அம்முவை திட்டி தீர்த்தனர். இந்த அம்மு ராமச்சந்திரன் யார்? எப்படி நடிகையானார்? 40 வயதான போதும், எதற்காக திருமணமே செய்யாமல் தனியாக வாழ்த்து வருகிறார். அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகை அம்மு ராமச்சந்திரன்1985 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவருக்கு, ஒரு தங்கையும் ஒரு தம்பியும் இருக்கின்றனர். அம்முவிற்கு ஐந்து வயதாக இருக்கும் போதே, தந்தை இறந்து விட, அம்மா கஷ்டப்பட்டு இவர்களை வளர்த்து இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல், அம்மாவிற்கு துணையாக படித்துக்கொண்டே பல வேலைகளை செய்து வந்த அம்முவிற்கு ஜெயா தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைதி தொடர்ந்து சன் டிவியில் தொகுப்பாளினியாக நுழைந்தார், கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் பார்த்துக்கொண்ட அம்மு, ஒரு பக்கம் படிப்பு, ஒரு பக்கம் கேரியர் என இரண்டையுமே சரிசமமாக எடுத்துச் சென்றதால் இளமை பருவத்தில் அனுபவிக்க வேண்டிய காதல், ஜாலியாக ஊர் சுற்றுவது, இப்படி எந்த விஷயத்தை நான் அனுபவித்ததே இல்லை என அம்மு ஒரு பேட்டியில் மன வருத்தத்துடன் பேசி இருந்தார்.

Ammu Ramachandran life story
Photo Credit:

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அம்முவிற்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ், மலையாளம் என சுமார் 25 படங்களில் நடித்துள்ள அம்முவிற்கு, சரோஜா திரைப்படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்த படத்தில், எஸ்பி சரணின் மனைவியாக நடித்திருந்தார். அதன்பின் மரியாதை, மந்திர புன்னகை, ஒரு மோதல் ஒரு காதல் போன்ற அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துள்ள அம்மு, ஜெயா, சன், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

நடிகை அம்மு ராமச்சந்திரன்: மூத்த மகள் என்பதால் குடும்பத்தின் ஒட்டுமொத்த பொறுப்பும் அம்மு மீது விழுந்ததால், தனது தம்பி, தங்கை இருவரையும் நன்றாக படிக்க வைத்து அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்து அழகு பார்த்து இருக்கிறார். இப்படி குடும்பத்திற்காகவே உழைத்ததால், திருமணம் என்ற ஒரு விஷயத்தை இவரால் நினைத்துப் பார்க்க முடியாமல் போனது. ஆனால், திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்கிற எண்ணம் இல்லை, அப்படி ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது என் அப்பன் முருகனுக்கு தெரியும். அப்படி கல்யாண வாழ்க்கை அமையவில்லை என்றால், மாற்றுத்திறனாளிகளுக்கு, பிள்ளைகளால் கைவிடப்படுவர்களுக்கு நான் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என அம்மு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

திருமணமாகவில்லை: இவர் சீரியல், சினிமா என பிசியாக நடித்துக்கொண்டு இருந்த போது, பலர் இவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளனர். ஆனால், குடும்பம் தான் முக்கியம் என இருந்ததால், அனைவரிடமும் நோ சொல்லி இருக்கிறார். ஆனால், தற்போது 40 வயதாகியும் திருமணமாகாமல் இருப்பதால், பலர் இரண்டாம் தாரமாக கேட்பதாகவும், நன்றாக தெரிந்தவர்களே நஷ்டப்படுத்துவதாகவும் கூறி வேதனைப்பட்டுள்ளார் அம்மு. முருகர் மீது அதீத அன்பு கொண்ட நடிகை அம்மு ராமச்சந்திரன். தனது instagram பக்கத்தில் கடவுள் சம்பந்தமாகவும், இறைவழிபாடு, விரதம், ஆன்மீகம் குறித்தும் அவ்வப்போது தகவல்களை பதிவிட்டு வருகிறார். மேலும், ஸ்டோரி டெல்லிங் ஆப்'பில் கதை படித்துக்கொண்டிருக்கிறேன். இவை தவிர, நிறைய வெப் சீரிஸ்களுக்கு வாய்ஸ் கொடுத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X