»   »  உதவும் உள்ளங்களே... இங்கே டெட்டனஸ் ஊசியை போட்டுக் கொள்ளுங்கள்- எமி ஜாக்சன்

உதவும் உள்ளங்களே... இங்கே டெட்டனஸ் ஊசியை போட்டுக் கொள்ளுங்கள்- எமி ஜாக்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ஓடியோடி உதவும் ஹீரோ, ஹீரோயின்கள் டெட்டனஸ் ஊசியை இங்கே வந்து போட்டுக் கொள்ளுங்கள் என்று நடிகை எமி ஜாக்சன் கூறியிருக்கிறார்.

சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் உடல்நலத்தைப் பொருட்படுத்தாது தன்னார்வலர்கள் தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர்.

மக்களுக்குத் தேவையான உணவு, உடை, போர்வைகள், மருந்துப் பொருட்கள், குடி தண்ணீர், பால் பவுடர் மட்டும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியும், அவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தும் தன்னார்வலர்கள் தொண்டாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மழையால் ஏற்படும் தொற்று அபாயங்கள் அவர்களைத் தாக்காமல் இருக்க டெட்டனஸ் ஊசியை சத்யம் சினிமாஸில் வந்து போட்டுக் கொள்ளுமாறு நடிகை எமி ஜாக்சன் அறிவுறுத்தி இருக்கிறார்.

அவர் கூறும்போது " சென்னையின் சொந்த ஹீரோ, ஹீரோயின்களே இந்த முக்கியமான செய்தியை படியுங்கள். உங்கள் பாதுகாப்பு எல்லாவற்றையும் விட முக்கியமானது.

சென்னையின் வெள்ளத்தில் தன்னார்வலர்கள் அனைவரும் துணிந்து வேலை செய்து வருகிறீர்கள். தயவு செய்து நீங்கள் அனைவரும் சத்யம் சினிமாஸ் சென்று உங்களது டெட்டனஸ் ஊசியை போட்டுக் கொள்ளுங்கள்" என்று எமி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

எனவே அன்பார்ந்த தன்னார்வலர்களே உடனே நீங்கள் டெட்டனஸ் ஊசியைப் போட்டுக்கொண்டு, மற்றவர்களுக்கு உதவி செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!

English summary
Actress Amy Jackson Says "To Chennai's very own heroes and heroines.. Please read this important message!! Volunteers Come to Sathyam Cinemas and Get your Tetanus Injection.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil