For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கூண்டுக்குள் அடைபட்டு இருக்கும் விலங்குகள்… ஆதங்கங்களை கொட்டித் தீர்த்த பிரபல நடிகை !

  |

  மும்பை : நடிகை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலங்குகளை பற்றி எழுதிய ஒரு பதிவு அனைவரின் ஆதரவை பெற்றுள்ளது.

  Virat Kohli allows his wife anushka to cut his Hair | Katrina Kaif into Household Works

  இந்த லாக்டவுனில் நம் அனைத்து பணிகளும் முழுவதுமாக முடங்கி இருக்கும் வேளையில், கடந்த 60 நாட்களை கடந்து நாம் வேறு எங்கும் போகாமல் வீட்டிலேயே அடைந்து கிடைக்கிறோம். எப்போ இந்த வீட்டை விட்டு வெளியே வரும் என்று காத்து இருக்கிறோம்.

  60 நாட்களுக்குள்ளே நாம் அனைவரும் கஷ்டப்பட்டுவிட்டோம் ஆனால், விலங்குகள் எப்போதும் கூண்டுக்குள் தான் இருக்கின்றன அவற்றை பற்றி நாம் யாரும் கவலைப்படவில்லை என்று விலங்குகள் குறித்து அழகாக கூறியுள்ளார் அனுஷ்கா.

  என்னம்மா... இப்படி தூக்குறீங்களே.. நடிகையின் வொர்க் அவுட்டை பார்த்து அசந்து 'அதை' வர்ணித்த ஃபேன்ஸ்!

   காதல் திருமணம்

  காதல் திருமணம்

  அனுஷ்கா சர்மா இந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாகவும் அதேசமயம் அதிகமாக சம்பளம் வாங்கக்கூடிய பல நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் பிகே, சுல்தான், சஞ்சு போன்ற பல வெற்றி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக உள்ளவர். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இருவரும் சேர்ந்து வெளியிடும் புகைப்படத்துக்கே பல ரசிகர்கள் உள்ளனர் .

  மனச்சோர்வு

  மனச்சோர்வு

  லாக்டவுனில் அனைவரும் அவர்களது வீட்டில் இருந்து கொண்டு அவரவர் சொந்த வேலைகளை மட்டுமே பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இவர் தற்போது மனிதநேயத்துடன் செய்துள்ள ஒரு பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாம் இன்னும் 100 நாட்கள் கூட லாக்டவுனில் இல்லை அதற்குள் நம்மில் பலர் மனச்சோர்வுடனும், அசௌக்கரியத்துடனும் இருக்கிறோம் என கூறியுள்ளார்.

   கூண்டுக்குள் அடைபட்டவிலங்கு

  கூண்டுக்குள் அடைபட்டவிலங்கு

  நாம் வீட்டில் இருக்கும் இந்த சமயத்தில் கூண்டுக்குள் அடைபட்டு கிடக்கும் விலங்குகளை பற்றி யாராவது சிந்தித்து இருப்போமா. அடுத்த முறை நீங்கள் அருங்காட்சியகத்திற்கோ, சர்க்கசிற்கோ போகும் போது இப்போது உள்ள உங்கள் சூழலையை மனதில் வைத்து கொள்ளுங்கள், அந்த விலங்குகள் அந்த கூண்டுக்குள் எவ்வளவு கஷ்டப்படுகிறது என்று,

   வெட்கப்படவேண்டும்

  வெட்கப்படவேண்டும்

  அந்த மாதிரி விலங்குகளை அடைத்து வைத்து நம்மை சந்தோஷப்படுத்தும் இடங்களுக்கு போவதற்கு நாம் அனைவரும் வெட்கப்படவேண்டும். விலங்குகள் பிறந்தது நம்மை கேளிக்கை செய்வதற்காக அல்ல அவர்களும் நம்மை போன்று ஒரு உயிருள்ள ஜீவன்கள் தான் என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்று அனுஷ்கா கூறியுள்ளார் .

   சித்ரவதை செய்கிறோம்

  சித்ரவதை செய்கிறோம்

  நாம் அவைகளை அதன் வாழ்நாள் முழுவதும் நம்முடைய கேளிக்கைகாகவும், பொழுது போக்கிற்காகவும் அந்த சிறை கூண்டுக்குள் அடைத்து வைத்துள்ளோம். அவர்களின் வாழ்நாளை வாழ விடாமல் கூண்டுக்குள் அடைத்து வைப்பது முற்றிலும் நியாயமற்ற செயல். அவைகளுக்கும் அதே ஏக்கம் இருக்கும், நாம் எப்படி இப்போது நம் வாழ்நாள் முழுவது இப்படியே போய்விடுமோ என்று அதிர்ச்சியில் உள்ளோமோ அவைகளும் அதே அதிர்ச்சியில் தான் இருக்கும். நாம் அனைவரும் அதன் வாழ்க்கையை வாழ விடாமல் அதனை ரசிக்கிறோம் என்ற பெயரில் சித்ரவதை செய்கிறோம்.

   அனுஷ்கா ஆதங்கம்

  அனுஷ்கா ஆதங்கம்

  அனுஷ்கா இவ்வாறு தனது ஆதங்கங்களை சொல்லி, அதை எடுத்து சொல்லும் விதமாக விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள சில படங்களையும் அவர் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாக பல லைக்குகளையும் கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். கொஞ்சம் சிந்தியுங்கள். இனி அந்த தவறை செய்வதா வேண்டாமா என்பதற்கான தேர்வு உங்களுடையது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மிருகங்களை மிகவும் நேசிக்கும் அனுஷ்கா, தனது செல்ல குட்டி ப்ருனோ இறந்தவுடன் மிகவும் சோகத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  English summary
  Actress Anushka Sharma has written about the animal on Instag
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X