»   »  கொச்சியில் கோலாகலமாக நடைபெற்றது "தாமிரபரணி" பானுவின் திருமணம்

கொச்சியில் கோலாகலமாக நடைபெற்றது "தாமிரபரணி" பானுவின் திருமணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை பானு - ரிங்கு டோமியின் திருமணம் இன்று கொச்சியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

தமிழில் நடிகர் விஷால் ஜோடியாக ‘தாமிரபரணி' படத்தில் அறிமுகமான பானு அந்தப் படத்தின் மாபெரும் வெற்றி காரணமாக, தாமிரபரணி பானு என்றே திரையுலகில் அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில் மலையாள பின்னணி பாடகி ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமிக்கும் நடிகை பானுவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து இரு வீட்டாரின் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

Actress Bhanu Marriage

அதன்படி கடந்த 23-ந்தேதி கொச்சியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நடிகை பானு-ரிங்கு டோமிக் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைதொடர்ந்து நடிகை பானு - ரிங்கு டோமிக் திருமணம் இன்று (30-ந்தேதி) கொச்சி எடப்பள்ளியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்றது.

திருமண நிகழ்வில் மணமக்கள் இருவரும் கேரள பாரம்பரிய உடை அணிந்து இருந்தனர், திருமணத்தில் ஏராளமான மலையாள நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு நடிகை பானுவை வாழ்த்தினார்கள்.

இன்று மாலை இவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியில் உள்ள கோகுலம் பார்க் ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது. இந்த திருமண வரவேற்பிலும் ஏராளமான மலையாள திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவிருக்கின்றனர்.

தமிழில் சமீபத்தில் வெளிவந்த வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தில் சந்தானத்தின் ஜோடியாக பானு நடித்து இருந்தார்.தொடர்ந்து பானுவின் நடிப்பில் சகுந்தலாவின் காதலன், வாய்மை மற்றும் பாம்பு சட்டை போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க பல்லாண்டு கல்யாண வாழ்க்கை நூறாண்டு....

English summary
Today Malayalam actress Muktha got married to Rinku Tomy at St George Syro-Malabar Catholic Forane Church in (Edappally) Kochi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil