»   »  ஆபாச படமெடுத்து மருத்துவ மாணவியை மிரட்டிய வழக்கு... நடிகை புவனேஸ்வரி மகன் கைது

ஆபாச படமெடுத்து மருத்துவ மாணவியை மிரட்டிய வழக்கு... நடிகை புவனேஸ்வரி மகன் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவக் கல்லூரி மாணவியை ஆபாசப் படமெடுத்து மிரட்டிய வழக்கில் நடிகை புவனேஸ்வரியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ், தெலுங்கில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் புவனேஸ்வரி. விபச்சார தடுப்பு வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன் இவரை கைது செய்தனர் போலீசார். அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவே பரபரப்புக்குள்ளான பல நிகழ்வுகள் அரங்கேறின.

Actress Bhuvaneswari's son arrested

புவனேஸ்வரி மகன் மித்து சீனிவாசன். இவர் மருத்துவ மாணவி ஒருவரை ஆபாசமாகப் படமெடுத்து இணையதளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார். மேலும் படத்தை ஆபாசமாக உள்ளது போல சித்தரித்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் மித்து சீனிவாசனை சென்னை மாநகரப் போலீசார் கைது செய்துள்ளனர்.

English summary
Chennai Police has arrested actress Bhuvaneswari's son for threatening college girl

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil